IPL 2023: கோலியின் மகள் வாமிகாவை டேட்டிங்கிற்கு அழைத்து செல்ல அனுமதி கேட்ட பச்சிளம் சிறுவன்!

By Rsiva kumar  |  First Published Apr 19, 2023, 1:45 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலியின் மகள் வாமிகாவை டேட்டிங்கிற்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்ட பச்சிளம் சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 24 ஆவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஷிவம் துபே, ரகானே, டெவான் கான்வே ஆகியோரது அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது.

IPL 2023: பும்ரா, ஆர்ச்சர் இல்லாமல் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

Tap to resize

Latest Videos

பின்னர் கடின இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு வந்த மேக்ஸ்வெல் மற்றும் டூப்ளெஸ்சி காம்பினேஷனில் ஆர்சிபி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற சென்னைக்கு வெற்றி வாய்ப்பு சாதகமானது. அதன் பிறகு தினேஷ் கார்த்திக் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டன் அவமதிப்பு! மூஞ்சியை உடைப்பேன் என மிரட்டிய நடத்துனர் சஸ்பெண்ட்.!

இந்தப் போட்டியின் போது, ஒரு பச்சிளம் சிறுவன், ஹாய், விராட் மாமா, நான் வாமிகாவை டேட்டிங்கிற்கு அழைத்துச் செல்லலாமா? என்று எழுதிய ஷாட்டை கையில் வைத்தவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சிலர் விமர்சித்து வருகின்றனர். ஒரு சமூகமாக நாம் எங்கு செல்கிறோம்? மீடியாவின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு செய்கின்றனர் என்றும், அந்த பெற்றோருக்கும் பெண் குழந்தை இருக்கும், இதே கேள்வியை திருப்பி அவர்களிடம் கேட்டால் என்னாகும்? என்றும் விமர்சித்து வருகின்றனர்.

உலகின் சிறந்த டி20 கிரிக்கெட்டர் என்ற விஸ்டன் விருது வென்ற மிஸ்டர் 360 டிகிரி!

 

 

click me!