கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் பாதியில் வெளியேறிய சூர்யகுமார் யாதவ் தற்போது வாக்கிங் ஸ்டிக் ஊன்றி நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே உலகக் கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த நிலையில், தொடரிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக அணியில் இன்னும் இடம் பெறவில்லை. ஆதலால், வேறு வழியின்றி தென் ஆப்பிரிக்கா அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்; டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையின் காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த 2ஆவது டி20 போட்டியும் முதல் இன்னிங்ஸ் முடியும் நிலையில் கடைசி ஓவரின் போது மழை குறுக்கிட்டது. அதன் பிறகு 2ஆவது இன்னிங்ஸ் தொடங்கப்பட்டது. இதில், ஓவர்கள் குறைக்கப்பட்டது. இறுதியாக டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்தது. இதில், இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. ஆனால், இந்தப் போட்டியில் பீல்டிங்கின் போது சூர்யகுமார் யாதவிற்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரால் நடக்க கூட முடியாத நிலையில், போட்டியிலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டு அணியை திறம்பட வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார்.
இதன் காரணமாக இந்தியா 1-1 என்று டி20 தொடரை சமன் செய்தது. சூர்யகுமார் யாதவ்விற்கு 2ஆம் நிலை தசைநார் கிழிந்துள்ளதாக கூறப்பட்டது. ஆதலால், அவரால் குறைந்த 3 மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தான் சூர்யகுமார் யாதவ் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வேடிக்கையாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: காயங்கள் ஒருபோதும் வேடிக்கையாக இருக்காது, ஆனால் நான் அதை என் முன்னேற்றத்தில் எடுத்துக்கொண்டு, எந்த நேரத்திலும், முழுமையாக திரும்ப வருவேன் என்று உறுதியளிக்கிறேன்! அதுவரை, நீங்கள் அனைவரும் விடுமுறைக் காலத்தை அனுபவித்து மகிழ்வீர்கள், தினமும் சிறிய சந்தோஷங்களைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.