#ENGvsPAK இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 7 பேருக்கு கொரோனா..!

Published : Jul 06, 2021, 03:30 PM IST
#ENGvsPAK இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 7 பேருக்கு கொரோனா..!

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள்(8ம் தேதி) தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது பாகிஸ்தான் அணி. முதலில் ஒருநாள் தொடரும், பின்னர் டி20 தொடரும் நடக்கவுள்ளது. 

வரும் 8ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 3 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனா உறுதியான அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதியானதால், திட்டமிட்டபடி பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli: சாதனைக்காக விளையாடினால் என்ன நடக்கும் தெரியுமா? மனம் திறந்த 'கிங்' கோலி!
Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!