ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 5 முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இதில், 2 முறை மட்டுமே பாகிஸ்தான் சாம்பியனாகியுள்ளது.
ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் அணியாக பாகிஸ்தான் திகழ்ந்தது. அந்தளவிற்கு பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் தரமான அணியாக பாகிஸ்தான் இருந்தது. இவ்வளவு ஏன், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 238 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்படட்து. வங்கதேசத்திற்கு எதிரான முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆனால், இந்தியாவிற்கு எதிராக விளையாடிய லீக் போட்டியைப் போன்று சூப்பர் 4 சுற்றிலும் இந்தியாவை எளிதில் விக்கெட் எடுத்து குறைந்த ரன்களில் சுருட்டி விடலாம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தப்பு கணக்கு போட்டுள்ளார். லீக் போட்டியில் பட்ட அவமானத்திற்கு வட்டியும் முதலுமாக இந்திய அணி திருப்பி கொடுத்தது. இந்திய 2 விக்கெட் மட்டுமே இழந்து 356 ரன்கள் குவித்தது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானையும், 128 ரன்களுக்குள் சுருட்டியது.
மேலும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 213 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தப் போட்டி குறித்து விமர்சனம் செய்தனர். குறைந்த ரன்கள் எடுத்து வெற்றி பெறுவது ஒன்றும் சாதாராண விஷயமல்ல. ஆனால், அதை இந்திய அணி செய்துள்ளது என்று பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில், தான் இலங்கை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலமாக 13ஆவது முறையாக இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமின்றி நடப்பு சாம்பியன் வேறு. மேலும், 1986, 1997, 2004, 2008, 2014, 2022 என்று 6 முறை ஆசிய கோப்பை சாம்பியனாகியுள்ளது. மாறாக, 7 முறை 2ஆவது இடம் பிடித்துள்ளது. மேலும், 9ஆவது முறையாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 3 முறை மட்டுமே இலங்கை சாம்பியனாகியுள்ளது. இதுவரையில் இந்தியா ஆசிய கோப்பையில் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறது.
Sri Lanka vs Pakistan, Wide: இதெல்லாம் வைடா, நீயெல்லாம் ஒரு நடுவரா? கோபம் கொண்ட இலங்கை ரசிகர்கள்!
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்த பாகிஸ்தான் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டி என்று சொல்லப்படும் சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டியில் பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் பாகிஸ்தான் 5 முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. அதில், 2 முறை மட்டுமே சாம்பியனாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானுக்கு சூப்பர் 4 சுற்று சரியாக அமையவில்லை. வீரர்களுக்கு காயம், மழை என்று பல சிக்கல்களை சந்தித்து தற்போது பரிதாபமாக நடையை கட்டியுள்ளது.