IPL 2022: ஷ்ரேயாஸ் ஐயருக்காக அடித்துக்கொள்ளும் 3 அணிகள்

Published : Jan 17, 2022, 03:48 PM IST
IPL 2022: ஷ்ரேயாஸ் ஐயருக்காக அடித்துக்கொள்ளும் 3 அணிகள்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்க 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.  

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அதனால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஐபிஎல்லில் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.

கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ரஷீத் கான் ஆகிய பெரிய வீரர்கள் சிலர் கழட்டிவிடப்பட்டனர். கேஎல் ராகுல் பஞ்சாப் அணியிலிருந்து அவராகவே விலகினார். டேவிட் வார்னர் சன்ரைசர்ஸிலிருந்து விலகினார். ஷ்ரேயாஸ் ஐயரை டெல்லி அணி விடுவித்தது. 

2015ம் ஆண்டிலிருந்து டெல்லி அணியில் ஆடிவரும் ஷ்ரேயாஸ் ஐயர், 2 சீசன்களாக அந்த அணியை கேப்டன்சியும் செய்தார். காயத்தால் அவர் ஆடமுடியாததால், 2021ம் ஆண்டு சீசனின் முதல் பாதியில் ரிஷப் பண்ட் கேப்டன்சி செய்ய, ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு வந்தபிறகும், ரிஷப்பையே கேப்டனாக தொடரவைத்தது டெல்லி அணி. அதனால் ஷ்ரேயாஸ் ஐயர் அதிருப்தியடைந்தார்.

இந்நிலையில் தான், டெல்லி அணியிலிருந்து விலகிய ஷ்ரேயாஸ் ஐயரை புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளில் ஒன்று, ஷ்ரேயாஸை கேப்டன்சிக்காக எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளுமே ஷ்ரேயாஸ் ஐயர் மீது ஆர்வம் காட்டவில்லை. புதிய கேப்டனை எதிர்நோக்கியிருக்கும் 3 அணிகள் ஷ்ரேயாஸ் ஐயர் மீது ஆர்வமாக உள்ளன.

ஆர்சிபி, கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்கும் முனைப்பில் உள்ளன. ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியதால், புதிய கேப்டனை நியமிக்க வேண்டியிருக்கும் ஆர்சிபி அணி, நல்ல பேட்ஸ்மேனும் கேப்டன்சி அனுபவம் கொண்டவருமான ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்கும் முனைப்பில் உள்ளது.

அதேபோல, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுலும் அந்த அணியிலிருந்து வெளியேறியதால், பஞ்சாப் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் மீது ஆர்வமாக உள்ளது. மேலும், 2 முறை சாம்பியனான கேகேஆர் அணியும், கம்பீருக்கு பிறகு சரியான கேப்டன் செட் ஆகாததால் புதிய கேப்டனை நியமிக்கும் முனைப்பில் உள்ளது. எனவே கேகேஆர் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் மீது கண் வைத்துள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் 87 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடி 2375 ரன்களை குவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!