West Indies vs Ireland: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது அயர்லாந்து

Published : Jan 17, 2022, 02:54 PM IST
West Indies vs Ireland: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது அயர்லாந்து

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது அயர்லாந்து அணி.  

அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸில்  சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தாமதமாக நடத்தப்பட்ட 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. 

ஒருநாள் தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷேய் ஹோப் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜஸ்டின் க்ரீவ்ஸ் (12), நிகோலஸ் பூரன் (9), ப்ரூக்ஸ்(1), ரோஸ்டான் சேஸ் (19), கேப்டன் பொல்லார்டு (3) ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் ஜேசன் ஹோல்டர் பொறுப்புடன் பேட்டிங் ஆடி 44 ரன்கள் அடித்தார். அகீல் ஹுசைன் (23), ஒடீன் ஸ்மித் (20) ஆகியோரின் சிறு பங்களிப்பால் 212 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

213 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் சீனியர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பால் ஸ்டர்லிங்கின் (44)  பொறுப்பான பேட்டிங், ஆண்டி மெக்பிரைன் (59), ஹாரி டெக்டார் (52) ஆகிய இருவரின் அரைசதத்தால் 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெற்றி அயர்லாந்து அணி, 2-1 என ஒருநாள் தொடரை வென்றது.

பொல்லார்டு, ஷேய் ஹோப், ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் என அனுபவ வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 2-1 என அயர்லாந்து அணி ஒருநாள் தொடரை வென்றது.
 

PREV
click me!

Recommended Stories

வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!
IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!