கோலி கொஞ்ச நாளாகவே ஆள் சரியில்ல.. அவர் எடுத்தது நல்ல முடிவு தான்..! கபில் தேவ் ஆதரவு

By karthikeyan VFirst Published Jan 16, 2022, 10:16 PM IST
Highlights

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியது நல்ல முடிவுதான்  என்று கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.
 

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து தன்னை நீக்கியதால் அதிருப்தியில் இருந்த விராட் கோலி, திடீரென டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார். டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை ஒருநாளைக்கு முன்பாகவே அணி வீரர்களிடம் விராட் கோலி தெரிவித்துவிட்டார்.

ஆனாலும் பொதுவெளிக்கு விராட் கோலியின் முடிவு திடீரென அறிவிக்கப்பட்ட அதிர்ச்சி முடிவுதான். இந்நிலையில், விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கபில் தேவ், விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய முடிவை வரவேற்கிறேன். விராட் கோலிக்கு கடந்த சில மாதங்கள் மிகக்கடினமானவை. டி20 கேப்டன்சியிலிருந்து விலகினார். அண்மைக்காலமாகவே கோலி பதற்றமாக தெரிகிறார். அதிகமான அழுத்தத்தில் இருக்கிறார். எனவே அவர் கேப்டன்சியிலிருந்து விலகியது, அவர் ஃப்ரீயாக ஆட உதவும். எனவே அது நல்லதுதான் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
 

click me!