Shane Warne கெரியரில் அவரை கதறவிட்ட 2 வீரர்கள் இவங்கதான்! ஆனால் அவங்களுக்கு பந்துவீசத்தான் அவருக்கு புடிக்கும்

Published : Mar 05, 2022, 12:21 PM IST
Shane Warne கெரியரில் அவரை கதறவிட்ட 2 வீரர்கள் இவங்கதான்! ஆனால் அவங்களுக்கு பந்துவீசத்தான் அவருக்கு புடிக்கும்

சுருக்கம்

ஷேன் வார்ன் கிரிக்கெட் கெரியரில் அவரது பவுலிங்கை அடித்து நொறுக்கிய 2 வீரர்கள் யார் யார் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார்.  

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரும், ஆல்டைம் சிறந்த ஸ்பின்னர்களில் டாப் இருவரில் ஒருவரானவருமான ஷேன் வார்ன், டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு(800 விக்கெட்டுகள்) அடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் ஆவார். ஷேன் வார்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியில் ஆடிய வார்ன், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், ஜெயசூரியா போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழலால் திணறடித்தவர்.  ரிஸ்ட் ஸ்பின்னரான ஷேன் வார்ன் வீசியுள்ள சில சுழற்பந்துகள், காலத்தால் அழியாதவை. பேட்ஸ்மேன்களை அதிரவைக்குமளவிற்கு தாறுமாறாக பந்தை திருப்பி தெறிக்கவிட்டுள்ளார் ஷேன் வார்ன்.

1993ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக் கேட்டிங்கை வீழ்த்திய ஷேன் வார்னின் சுழற்பந்து தான் நூற்றாண்டின் சிறந்த பந்தாக பார்க்கப்படுகிறது. அதுமாதிரி ஏகப்பட்ட பந்துகளை வீசி லெஜண்ட் பேட்ஸ்மேன்களை அலறவிட்டிருக்கிறார் ஷேன் வார்ன்.

ஆனால் அவரது பவுலிங்கையும் சில பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடி அவரை தெறிக்கவிட்டிருக்கின்றனர். அப்படியான பேட்ஸ்மேன்களில், தன்னை அச்சுறுத்தியவர்கள் யார்யார் என்று ஷேன் வார்ன் ஒருமுறை கூறியிருக்கிறார்.

அதுகுறித்து ஒருமுறை பேசிய ஷேன் வார்ன், னது சமகால வீரர்களில் சச்சினும் லாராவும் மிகச்சிறந்தவர்கள். எனது காலத்தில் மட்டுமல்ல; ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் அவர்கள். எனது பவுலிங்கை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டவர்கள் அவர்கள் தான். ஆனாலும் எனக்கு அவர்களுக்கு பந்துவீசத்தான் பிடிக்கும். சில நேரங்களில் எனது பவுலிங்கை பொளந்துகட்டினாலும், சில நேரங்களில் அவர்களது விக்கெட்டை விரைவில் வீழ்த்திவிடுவேன் என்றார் ஷேன் வார்ன்.

சிறந்த பவுலர்களை சிறந்த பேட்ஸ்மேன்கள் ஆடுவதையும், சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த பவுலர்கள் பந்துவீசி மிரட்டுவதையும் பார்க்கத்தான் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அந்த வகையில் ஷேன் வார்னை சச்சினும் லாராவும் ஆடும் விதம் அபாரமாக இருக்கும். அதேவேளையில், அவர்களை ஷேன் வார்ன் தனது சுழலால் தெறிக்கவிடுவதும் பார்க்க அருமையாக இருக்கும். அப்படியான ஒரு போட்டிதான் சச்சினுக்கும் ஷேன் வார்னுக்கும் இடையேயானது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!