India vs Sri Lanka: ஜடேஜா அபார சதம்.. அஷ்வின் அதிரடி அரைசதம்..! மெகா ஸ்கோரை நோக்கி இந்தியா

Published : Mar 05, 2022, 11:45 AM IST
India vs Sri Lanka: ஜடேஜா அபார சதம்.. அஷ்வின் அதிரடி அரைசதம்..! மெகா ஸ்கோரை நோக்கி இந்தியா

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா அபாரமாக விளையாடி சதமடித்தார். அஷ்வின் அரைசதம் அடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 130 ரன்களை குவித்தனர். இவர்களின் பொறுப்பான பேட்டிங்கால் மெகா ஸ்கோரை இந்தியா அடிக்கவுள்ளது.  

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது. விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா  பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 10 ஓவரில் 52 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடி கொண்டிருந்த ரோஹித் சர்மா, 28 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்த நிலையில் 10வது ஓவரில் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வாலும் 33 ரன்னில் ஆட்டமிழக்க, 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

3ம் வரிசையில் ஹனுமா விஹாரி இறங்கினார். 2 விக்கெட் விழுந்தபிறகு, விராட் கோலி களத்திற்கு வந்தார். விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவென்பதால், 2 ஆண்டுகளாக சதத்தின் தேடலில் இருக்கும் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப கோலியும் நல்லவிதமாக தொடங்கினார். ஹனுமா விஹாரியும் கோலியும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி 90 ரன்களை சேர்த்தனர். களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த விராட் கோலியை 45 ரன்னில் எம்பல்டேனியா வீழ்த்த, ஹனுமா விஹாரி 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 97 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 96 ரன்களை குவித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

332 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் ஜடேஜாவும் அஷ்வினும் இணைந்து அபாரமாக விளையாடினர். ஜடேஜா சிறப்பாக ஆட, அஷ்வின் அடித்து ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர். அஷ்வின் அரைசதம் அடிக்க, ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 2வது சதத்தை பதிவு செய்தார். இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 130 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த அஷ்வின் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 500 ரன்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சதமடித்த ஜடேஜா தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!