ஐபிஎல் 2021 ஏலத்தில் வெறும் 61 இடத்திற்கு 1097 வீரர்கள் பதிவு..! 21 வீரர்கள் இந்தியாவிற்காக ஆடியவர்கள்

Published : Feb 05, 2021, 08:27 PM ISTUpdated : Feb 05, 2021, 08:43 PM IST
ஐபிஎல் 2021 ஏலத்தில் வெறும் 61 இடத்திற்கு 1097 வீரர்கள் பதிவு..! 21 வீரர்கள் இந்தியாவிற்காக ஆடியவர்கள்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திற்கு 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.  

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கிறது. அந்த ஏலத்திற்காக வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யும் கால அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.  வெறும் 61 வீரர்களுக்கான இடம் தான் காலியாக உள்ளது. அதற்காக 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த வீரர்கள் 813 பேரும், 283 வெளிநாட்டு வீரர்களும் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த 813 உள்நாட்டு வீரர்களில் 21 பேர், இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியவர்கள். 743 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத உள்நாட்டு வீரர்கள். 186 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியவர்கள்.

ஆஃப்கானிஸ்தான்(30 வீரர்கள்), ஆஸ்திரேலியா(42), வங்கதேசம்(ஐந்து), இங்கிலாந்து(21), அயர்லாந்து(2), நேபாளம்(8), நியூசிலாந்து(29), ஸ்காட்லாந்து(7), தென்னாப்பிரிக்கா(38), இலங்கை(31), யூ.ஏ.இ(9), அமெரிக்கா(2), வெஸ்ட் இண்டீஸ்(56), நெதர்லாந்து(1), ஜிம்பாப்வே(2).
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!