நான் கட்டை பிரம்மச்சாரி என்று சொல்கிறார்களே.. பிரம்மச்சாரி என்றால் யார் தெரியுமா?

By Dinesh TGFirst Published Sep 15, 2022, 11:38 AM IST
Highlights


திருமணம் ஆகாதவர்கள் எல்லோருமே பிரம்மச்சாரிகள் தான் என்று தானே நினைக்கிறோம். ஆனால் பிரம்மச்சாரியாக  இருப்பதென்றால்  அதற்கான விடையே வேறு.

பிரம்ம சரியம்  பிரம்மத்தை நோக்கி பயணிப்பது. அதாவது கடவுளை நோக்கிய் பயணிப்பது ஆகும்.  

பிரமை + அசாரி அதாவது பிரமை என்னும் மாயங்கள் பக்கம் ஆசாரி = செய்யாதவர். அதாவது தொடர்ந்து செல்லாதவர்.  இதை தான் வடமொழியில் ப்ரஹ்ம என்றது.  மேலும் மனித உறவுகளை தவிர்த்து பர்ப்பிரம்ம இறையை மனதில் நிறுத்தி வைப்பவனே பிரம்மசாரி (பிரம்ம + அகம் + சாரி) தன் அகத்திலுள்ள இறையாகிய பிரம்மத்தை அறிபவன். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 

பிரம்மச்சர்யம் என்றால் குளிர்ந்த நீரில் குளிப்பது; பெண்களை தீண்டாது இருப்பது; பெண் போகத்தை துறப்பது; கொழுப்பும், இச்சையும் தரும் உணவுகளை நீக்கி, உப்பு, புளி, காரம் இவைகளுக்கு அதிக இடம் கொடுக்காமல் இருப்பது; முப்பொழுதும் உருவ வழிபாடு; வேத ஆகமங்களை பாராயணம் செய்தல் போன்ற நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது என்றும் சொல்லப்படுகிறது.

உண்மையில் பிரம்மச்சர்யம் என்பது பிரம்மப் பொருளை சார்ந்திருத்தல்; சதா மனமானது பிரம்மத்தில் லயித்திருப்பது. இப்படி இருப்பதனால், பிரம்மத்திற்கு சரியாகி தான் பிரம்மமாவதே பிரம்மச்சர்யம். பிரம்மத்துக்கு சரியானவனே பிரம்மச்சாரி. அந்த பிரம்மச்சரியனின் பார்வை பட்ட இடமெல்லாம் பிரம்ம சைதன்யத்தைப் பெறும். பிரம்மச்சாரி தொட்ட பொருளெல்லாம் பிரம்மத்தை தீண்டிய ஆற்றல் பெறுகிறது.

இன்றைய உலகில் பிரம்மச்சர்யம் என்ற பொருள் கேலிக் கூத்தாகிவிட்டது. இன்று எத்தனையோ துறவியர் தமது ஒரு நாளைய பிரம்மச்சரிய இயற்கை உணவுக்காக பல நூறு ரூபாய் செலவிடுகின்றனர். அவர்கள் வசிக்கும் இடம் சகல நவீன வசதிகளைப் பெற்றதாகவே இருக்கிறது. அவர்களைப் பார்க்க, சாதாரணமானவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. வசதியும் வாய்ப்பும் பெற்ற செல்வந்தர்களுக்கே கிடைக்கிறது. சீமான்களே துறவியரின் உற்ற நண்பர்களாகத் திகழ்கின்றனர்.

குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு

பிரம்மத்தை அறிந்தால்தான் பிரம்மச்சாரியாக முடியும். தான் யார், பிரம்மம் எது என்று கேள்வி கேட்டு, அதற்கான பதிலும் பொருளும் பளிச்சென விளங்க வேண்டும். பிரம்மத்திற்கு புறம்பாக இருக்கின்ற தான் யார்? தனக்கும் பிரம்மத்திற்கும் உள்ள உறவும் பிரிவும் என்ன? தன்னை இயக்குவது பிரம்மமா? அல்லது தான் தானாகவே இயங்கிக்  கொண்டிருக்கிறதா? என்ற கேள்விகளுக்கும் தெளிவு கிடைக்க வேண்டும்.

தன்னையும் அறிதல் வேண்டும். பிரம்மத்தையும் அறிதல் வேண்டும். தன்னை அறியும் ஞானம் எப்படி வரும்? பிரம்மத்தை அறிந்து அடையும் ஞானம் எப்படி பெறுதல் கூடும்? இவைகளை எல்லாம் தெரிந்து தெளிவுபடாமல் புலன்களை அடக்க முயல்வதனால் எந்த பலனும் கிட்டாது.

கருங்கல்லில் கடவுள் சிலை .. காரணம் என்ன தெரியுமா?

பிரம்மம் என்பது எக்காலத்தும் எங்கும் ஒரே தன்மையாய் நீக்கமற பரிபூரணமாக நிறைந்து நிற்கும் பொருள் எதுவோ அதுவே பிரம்மம். அந்தப் பிரம்மப் பொருள் எதனாலும் அழிவுபடாதது; எக்காலத்தும் மாறுபாட்டிற்கும் உள்ளாகாத பொருள்.  இந்த பிரம்மப் பொருளை அறிந்து கொண்டால் மெய்ப்பொருளோடு தன்னை சரியானபடி

click me!