ராகு கேது தோஷம் இருக்கா.. இதை செய்யுங்க!

By Dinesh TGFirst Published Sep 14, 2022, 4:36 PM IST
Highlights

ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்பவும், ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை என அவரவரின் சூழ்நிலையை சமாளித்து வருகின்றனர். ஆனால் கையில் எதுவும் இல்லாமல் பிரச்சனையை சமாளிப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும். இதனால் மன நிம்மதியும் இல்லாமல் போகும் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். 
 

ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்பவும், ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை என அவரவரின் சூழ்நிலையை சமாளித்து வருகின்றனர். ஆனால் கையில் எதுவும் இல்லாமல் பிரச்சனையை சமாளிப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும். இதனால் மன நிம்மதியும் இல்லாமல் போகும் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். 

இதற்கு முக்கிய காரணம் ராகு கேது தோஷமாகும். ராகு கேது தோஷம் இருக்கக்கூடியவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று  துர்க்கை அம்மனை ராகு கால நேரத்தில் பூஜை செய்து வந்தால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் வாரந்தோறும் ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டால் அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கும். இதனை எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் துர்கை அம்மனை வழிபட்டு வந்தால் அந்த தோஷத்தில் இருந்து விடுபட்டு விடுவர். அதோடு அவர்களின் பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வும் கிடைக்கும். அப்படி செவ்வாய்க்கிழமை மற்றும் துர்க்கை அம்மனை வழிபடுவது மட்டுமின்றி, வாரம் முழுவதும் ஒவ்வொரு கிழமையிலும், ஒவ்வொரு நேரத்திலும் வரும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் நீங்கள் எதிர்பாராத பல நல்ல காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

முடிந்தவரையில் கோயிலுக்குச் சென்று துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் நெய் விளக்கு தீபம் ஏற்றுவதை தொடர்ந்து செய்து வந்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும். ஒருவேளை கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், வீட்டில் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

ஆனால் நீங்கள் விரைவான பலனை பெற.. முடிந்தளவு கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றினால் மட்டுமே முடியும். அப்படி கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி விட்டு வந்த கையோடு பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து சுற்றி போட்டுக் கொள்ள வேண்டும்.

குங்குமம் தடவிய எலுமிச்சையை தலைவாசலில் வைப்பது ஏன்?

அவ்வாறு ஞாயிற்றுக் கிழமையில் மாலை நான்கரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றினால் நல்லது. திங்கட்கிழமை பொறுத்தவரையில் காலை 7 மணி முதல் 9 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். அதேபோன்று செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி முதல் 4 1/2 மணிக்குள்ளும், புதன்கிழமை மதியம் 12 மணி முதல் 1 1/2 மணிக்குள்ளும், வியாழக்கிழமை மதியம் 1 1/2 மணியிலிருந்து மூன்று மணிகுள்ளும், வெள்ளிக்கிழமை காலை பத்து முப்பது மணி முதல் 12மணிகுள்ளும், சனிக்கிழமை காலை 9 மணி முதல் பத்து முப்பது மணிகுள்ளும் தீபமேற்றி வழிபட வேண்டும்.

எளிமையான இந்த பரிகாரத்தை  இறைவனின் மீது நம்பிக்கையோடு செய்தால் நன்மையே நடக்கும். 

click me!