காரைக்குடியில் ஒரு தென்திருப்பதி சென்று வாருங்கள்.. திருப்பம் கிடைக்கும்

By Dinesh TG  |  First Published Sep 15, 2022, 10:07 AM IST


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள, அரியக்குடியில் அமைந்திருக் கிறது திருவேங்கடமுடையான் திருத்தலம். இது வெங்கடாஜலபதியின் பூலோக உறைவிடங்களுள் ஒன்றாகும். இங்கு வழிபடுவது திருப்பதியில் வழிபடுவதற்குச் சமமாக கருதப்படுவதால் இதை தென் திருப்பதி என்று அழைக்கின்றனர்.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள, அரியக்குடியில் அமைந்திருக் கிறது திருவேங்கடமுடையான் திருத்தலம். இது வெங்கடாஜலபதியின் பூலோக உறைவிடங்களுள் ஒன்றாகும். இங்கு வழிபடுவது திருப்பதியில் வழிபடுவதற்குச் சமமாக கருதப்படுவதால் இதை தென் திருப்பதி என்று அழைக்கின்றனர். 450 ஆண்டு பழமையான இத்திருத்தலத்தின் வரலாறு சுவாரசியமானது. பக்தன் இருக்கும் இடம் தேடி வந்து குடியமர்வான் திருவேங்கடமுடையான் என்பதற்கு சாட்சியமாக விளங்குகுகிறது இத்திருத்தலம்.

இப்பகுதியைச் சேர்ந்தவரான சேவுகன் செட்டியார், திருப்பதி பெருமாள் மீது தீராத பக்தி கொண்டு, ஆண்டுதோறும் திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்று காணிக்கை செலுத்தி வந்தார். அப்படி ஒருமுறை பாதயாத்திரைக்குச் சென்றபோது முதுமை காரணமாக திருமலையில் மயங்கி விழுந்தார்.விழித்து எழுந்த அவருக்கு, திருமாலைக் காண திருப்பதிக்கு இனி வரமுடியாமல்  போய்விடுமோவென்ற கவலை ஏற்பட்டது.

Latest Videos

undefined

அப்போது காட்சியளித்த திருமால், ‘பக்தன் இருக்கும் இடத்திலே நான் இருப் பேன்; ஊர் திரும்பும்போது, எந்த இடத்தில் உடைந்த தேங்காயும், குங்குமமும் இருக்கிறதோ அங்கே குடியிருப்பேன்’ எனக் கூறி மறைந்தாராம். சேவுகன் செட்டியார், ஊர் சென்றபோது, உடைந்த தேங்காய், குங்குமம் இருந்த இடத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டு கொண்டிருந்தது. அந்த இடத்திலேயே திருவேங்கடமுடையான் ஆலயம் உருவானதாக வரலாறு. இங்கு மூலவர் சுயம்புவாகக் காட்சி தருகிறார்.

இந்த கோயிலுக்கு இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. இந்தக் கோபுரங்க ளில் மகாபாரத, ராமாயணக் கதைச் சிற்பங்கள் உள்ளன.கோயில் மதில் சுவரையொட்டி உட்புறம் 352 அடி நீளம், 195 அகலத்தில் வெளிப்பிரகாரம் உள்ளது. உள்பிரகாரம் 192 அடி நீளம், 120 அடி அகலம் கொண்டது. பெரிய ராஜகோபுரத்துக்கும், ரிஷி கோபுரத்துக்கும் இடையே 90 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட தசாவதார மண்டபம் உள்ளது. பன்னிரெண்டு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூண்களிலும் தசாவதாரக் காட்சிகள், கருடன்,

அனுமார் சுதைச் சிற்பங்களும் உள்ளன. தசாவதார மண்டபத்தைத் தொடர்ந்து ரிஷி கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் மகா மண்டபம் உள்ளது. இதில் அழகிய சிற்பங்களுடன் 178 தூண்கள் உள்ளன. இம்மண்டபத்தில் நுழைந்தவுடன் முகப்பில் பலிபீடமும், அதை அடுத்து கொடி மரமும் உள்ளன.

கொடி மரத்தையடுத்து பெருமாளை நோக்கி வணங்கியவாறு கருடாழ்வார் உள்ளார். அவர் சன்னிதிக்கு வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு ராமர் சன்னிதி உள்ளது. இதில் ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகிய நால்வரும் உள்ளனர்.கருவறையில் நின்ற கோலத்தில் திருவேங்கடமுடையான், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மூலவர் சன்னிதிக்கு வடகிழக்கு மூலையில் சேனை நாயகர் சன்னிதி உள்ளது. தெற்கே அலர்மேல்மங்கை தாயார் சன்னிதியும், வடக்கே ஆண்டாள் சன்னிதியும் உள்ளன.

கணவன் மனைவிக்குள் உள்ள சிக்கல் தீர வேண்டுமா?

வெளிப்பிரகாரத்தில் மகா மண்டபத்தின் வடபுறம் பிரம்மாண்டமான ஏகாதசி மண்டபம், ஓடு வேயப்பட்டு அழகிய மரவேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய மூலிகை ஓவியங்கள் இன்றும் பொலிவு இழக்காமல் உள்ளன. ஏகாதசி மண்டபத்துக்கு முன்புறம் கோயில் மேல்தளத்தில் ஈசான்ய மூலையில் கருடபகவான் இருப்பதால் மூலைக்கருடன் என்று அழைக்கப்படுகிறார். திருமணத்தடை குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.  இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

click me!