பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை, கோவையில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இன்று காலை வெகு விமரிசையாக கும்பாபிஷேகமானது நடைபெற்றது. மேலும் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தைபூசம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கோவை மற்றும் மதுரையில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருப்பூரில் தமிழக இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்
undefined
அதன்படி மதுரை பழனி இடையே ஜனவரி 27, பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு பழனி சென்றடையும். மறு மார்க்கத்தில் 27, பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற கல்லூரி மாணவர் உடல் துண்டாகி பலி
அதே போன்று கோவையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று எம்.பி.க்கள் வேலுசாமி, சண்முகசுந்தரம் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். அதன்படி கோவையில் இருந்து ஜனவரி 27, 28, 29 மற்றும் பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது பகல் 1 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ஜனவரி 27, 28, 29 மற்றும் பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் பகல் 2 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள் மாலை 5.30 மணிக்கு மீண்டும் கோவை வந்தடைகிறது. இந்த ரயில் மடத்துகுளம், உடுமலைபேட்டை, பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.