Vastu tips: வீடுகளில் வளர்க்கும் 6 செடிகளால் துரதிரஷ்டம் வரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அது குறித்து விரிவாக காணலாம்.
தாவரங்களை வீட்டில் வளர்க்கும்போது பசுமையான தோற்றம் கிடைப்பதோடு நிம்மதியாகவும் உணரலாம். ஆனால் சில செடிகள் நம் வாழ்க்கையை நரகமாக்கும். துரதிர்ஷ்டவசமான அந்த தாவரங்கள் குறித்து வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. துளசி, தாமரை, மல்லிகை ஆகிய தாவரங்கள் வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி வாஸ்துபடி பலன்களையும் தருகின்றன. துரதிர்ஷ்டவசமான பலன்களை தரும் செடிகள் குறித்து இங்கு காணலாம்.
மருதாணி
சாஸ்திரங்களின்படி, மருதாணி செடியில் தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த செடியை வீட்டில் நடுவதால் எதிர்மறை ஆற்றல் பரவுமாம். இது வீட்டின் மகிழ்ச்சியையும், அமைதியையும் மொத்தமாக அழிக்கிறது. அதை வீட்டில் நடாதீர்கள்.
பேரீச்சை மரம்
பேரீச்சை மரத்தை நாம் வீடுகளில் வளர்ப்பது தீமை விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் வீட்டில் பண குறையும். பணம் குறித்த சிக்கல்களுக்கு பேரிச்சை மரம் இட்டுச் செல்லும்.
புளிய மரம்
வாஸ்து சாஸ்திரத்தின்படி புளிய மரம் வீட்டில் எதிர்மறையை கொண்டு வரும். இதன் சாகுபடியால், வீட்டில் எப்போதும் அச்சச் சூழல் நிலவுகிறது. அதனால் வீட்டில் நடக்கூடாது. வீட்டின் முற்றத்தில் புளியமரத்தை நடக்கூடாது. இது மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இந்த மரம் அழகாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களின் கடனை அதிகரிக்கும். நோய்களையும் அதிகரிக்க செய்யும். கவனம் மக்களே!
வறண்ட தாவரங்கள்
முள்கள் நிறைந்த செடிகளை வாஸ்து சாஸ்திரத்தில் கெட்ட பலன்களை தரும் என்கின்றனர். இவற்றை வீட்டுக்குள்ளும் சுற்றிலும் நடக்கூடாது. இதனால் வீட்டில் பதட்டமான சூழல் உருவாகும். இத்தகைய தாவரங்கள் குடும்பத்தில் பரஸ்பர வேறுபாடுகளை அதிகரிக்கும்.
காய்ந்த செடிகளை நீக்குங்கள்
வீட்டில் நடப்பட்ட செடிகள் காய்ந்து கொண்டிருந்தால், அவற்றை ரொம்ப அகற்றுவது நல்லது. வாஸ்து படி, காய்ந்த மரங்கள், தாவரங்கள் வீட்டில் துன்பத்தை கொண்டு வரும். அவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள்.
இதையும் படிங்க: மயிலிறகை வீட்டில் வைப்பது நல்லதா? கெட்டதா? புராணங்கள் சொல்லும் உண்மை தெரியுமா?
அகாசியா
இது ஒருவகை கருவேல மரம். புதர் வகையை சேர்ந்தது. சாஸ்திரங்களின்படி, இதை வீட்டில் வளர்ப்பதால் சர்ச்சைகளை அதிகரிக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல வாழத் தொடங்குகின்றனர். இதனை வீட்டைச் சுற்றி வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. வீட்டில் நிம்மதியும், பொருளாதார நிலை மேம்பாடும் ஏற்பட இந்த தாவரங்களை வளர்ப்பதை தவிர்த்தால் போதுமானது.
வாசகர்களே.. இந்தக் கருத்துக்கள் முழுக்க ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையிலானது. அறிவியல்பூர்வமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: பெண்களின் உச்சக்கட்டம் பத்தி ஆண்கள் நினைக்குறது முழுக்க தப்பாம்... எப்படி செயல்பட்டால் சக்சஸ் ஆகும்?