கேட்டதை அல்லது நினைத்ததை கொடுக்கும் கல் உப்பு பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும்?எப்படி செய்ய வேண்டும்? எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் ? போன்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாம் அனைவரும் கல் உப்பை சமையலில் பயன்படுத்தி இருப்போம். ஆனால் கல் உப்பு ஆன்மீகத்திலும் மிகப் பெரிய சக்தி கொண்டது. இப்படியான கல் உப்பை வைத்து கேட்ட வரங்களை தரும் கல் உப்பு பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்,.
இந்த கல் உப்பு பரிகாரம் மிக பயனுள்ள ,சுலபமான ,சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். கல் உப்பானது எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் தன்மை கொண்டது. தவிர கையில் உப்பு வைத்து கொண்டிருக்கும் போது நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த கல் உப்பு பரிகாரத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு முறை தான். இந்த கல் உப்பு வைத்து நினைத்ததை நடத்தியம், பிரச்சனைகளையும் சரி செய்துள்ளார்கள்.
இன்றும் கிராமங்களில் இருக்கும் மக்கள் உப்பினை கடன் வாங்க மாட்டார்கள் ஏன்னெனில் உப்பு கொடுக்கும் நபரிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அவர்களுக்கு வந்து விடும் என்று உப்பு வாங்குவதை தவிர்க்கிறார்கள்.
கேட்டதை அல்லது நினைத்ததை கொடுக்கும் கல் உப்பு பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும்?எப்படி செய்ய வேண்டும்? எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் ? போன்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எப்போது செய்ய வேண்டும்:
அதிகாலை எழுந்து அதாவது பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு இரண்டு கைகளிலும் கல் உப்பு வைத்துக் கிழக்கு முகமாக உட்கார்ந்து .கொள்ள வேண்டும்.
கோடைக்காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா !
எப்படி செய்ய வேண்டும்:
நமது மடியில் ஒரு வெள்ளை நிற காகிதத்தை வைத்துக் கொண்டு கைகளை தொடைகளில் வைத்து உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்குமாறு செய்து கைகளை மூடிக் கொள்ள வேண்டும். அதன் பின் உங்களுக்கான வேண்டுதலை அல்லது வரத்தை ,பிரார்த்தனையை மனதில் கூறிக் கொள்ள வேண்டும். அல்லது வாய் விட்டு சத்தமாக சொல்லிக் கொள்ள வேண்டும்.
உங்களது வேண்டுதலை சுமார் 15 நிமிடங்கள் வரை நேர்மறையாக சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக கடன்கள் தீர வேண்டுமெனில் எனக்கு நிறைய பணம் கிடைக்க உள்ளது .எனது கடன் பிரச்சனைகள் முழுதும் தீர்ந்து விடும் என்று நேர்மறையான பிரார்த்தனையாக கூற வேண்டும்.
நான் சொந்த வீடு வாங்கி விடுவேன். எனக்கு திருமணம் விரைவில் நடைபெறும். நான் நல்ல மதிப்பெண் பெறுவேன். இந்த மாதிரி நமது விருப்பங்களை நேர்மறையான முறையில் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு உங்களுடைய ஆசைகளை சுமார் 15 நிமிடங்கள் வரை நேர்மறையாக கூற வேண்டும். பின் அந்த கல் உப்பை ஒரு பேப்பரில் போட்டு மடித்து வைத்து ,பின் துணை ஓடும் நீரோடையில் உப்பை கொட்ட வேண்டும்.
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் நீரோடை இல்லாத பட்சத்தில் கிச்சன், பாத் ரூம் போன்ற இடங்களில் இருக்கும் குழாயினை திறந்து உப்பை கொட்ட வேண்டும்.
எத்தனை நாட்கள் செய்வது:
இப்படி தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பிரார்த்தனையை 21 நாட்கள் தொடர்ந்து செய்து உங்களது நியாயமான ஆசைகள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்!