நாம் என்ன செய்தால் இந்த நிலையில் இருந்து விடுபட்டு நமக்கான நிலையை அடைய முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள உள்ளோம். நமது நிலையை சரி செய்ய சூரியனையும் ,சந்திரனையும் 48 நாட்கள் முறையாக வழிபட்டாலே போதும்.எப்படி வழிபடுவது? எப்போது வழிபடுவது போன்ற பயனுள்ள தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அதே போன்று சில வற்றை அடைய வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். ஆனால் ஒரு சிலரிடம் என்ன தான் தகுதியும்,திறமையும் இருந்தாலும் அவர்கள் நினைத்த இலக்கை எட்ட முடிவதில்லை.
ஆசைப்பட்டதும் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். இதற்காக நாம் தெய்வத்தை நொந்து கொள்வது வழக்கம். ஆனால் இப்படியான நிலைக்கு காரணம் நமது ஜாதக அமைப்பே . ஜாதகத்தில் முக்கிய அம்சத்தில் இருப்பது சூரியனும்,சந்திரனும் தான். சூரியன்,சந்திரன் இல்லை என்றால் எப்படி இந்த உலகம் இயங்காதோ , அப்படி தான் சூரியனும்,சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சரியாக இல்லையென்றால் அந்த ஜாதகரால் பெரிய அளவில் சோபிக்க இயலாது. சூரியனும்,சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சரியாக இல்லையென்றால் அந்த ஜாதகரால் பெரிய அளவில் சோபிக்க இயலாது.
அப்படியிருக்கையில் நாம் என்ன செய்தால் இந்த நிலையில் இருந்து விடுபட்டு நமக்கான நிலையை அடைய முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள உள்ளோம். நமது நிலையை நாமே சரி செய்ய சூரியனையும் ,சந்திரனையும் 48 நாட்கள் முறையாக வழிபட்டாலே போதும்.
அப்படியிருக்கையில் நாம் என்ன செய்தால் இந்த நிலையில் இருந்து விடுபட்டு நமக்கான நிலையை அடைய முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள உள்ளோம். நமது நிலையை நாமே சரி செய்ய சூரியனையும் ,சந்திரனையும் 48 நாட்கள் முறையாக வழிபட்டாலே போதும்.
சூரிய வழிபாடு:
காலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்து விட்டு கிழக்கு முகமாக நின்று ஒரு வெற்றிலையையும், ஒரு செம்பில் தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சூரியனை பார்த்தவாறு இரண்டு கைகளால் செம்பை பிடித்து செம்பில் இருந்து வரும் தண்ணீர் வெற்றிலையில் பட்டு வருமாறு வைத்து நமஸ்காரம் செய்து
ஓம் ஆதித்யாய நமஹ!
என்று கைகளை உயர்த்தி தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி மந்திரத்தை சொல்லிக்கொண்டே தண்ணீரை ஊற்ற வேண்டும். இவ்வாறு 11 முறை செய்ய வேண்டும். இது தான் சூரிய வழிபாடு
சந்திர வழிபாடு:
இந்த வழிபாட்டிற்கு மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆனபிறகு சந்திரன் தெரியும் நேரத்தில் , சந்திரனை பார்த்தவாறு அகல் விளக்கில் விளக்கேற்றி , ஒரு செம்பில் தண்ணீரும் வெற்றிலையும் எடுத்துக் கொண்டு
ஓம் சந்திராய நமஹ!
என்று இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்துநீரை கீழே ஊற்ற வேண்டும்.
இந்த இரு வழிபாட்டினையும் நாம் தினமும் மேற்கொண்டு வந்தால் நமக்கு தகுதியான அனைத்து விஷயங்களும் நமக்கு கிடைக்கும். மேலும் நவகிரஹங்களின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும்.
இதன் கிரக தோஷங்கள் நீங்கும்.
உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் தீரும். உங்களுக்கு தேவையான ,நடக்க வேண்டிய பிராத்தனையை நினைத்துக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டினை செய்து வந்தால் அந்த விஷயம் நிறைவேறும். ஆசிகள் கைகூடும் என்பது எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. மிகவும் எளிய, பயனுள்ள இந்த வழிபாட்டினை நீங்களும் செய்து பயனடையுங்கள்!