3 முறை சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை இப்படி செய்து பாருங்கள்!தரித்திரம் அனைத்தும் வீட்டை விட்டு ஓடி விடும்,

By Asianet Tamil  |  First Published Mar 19, 2023, 3:39 PM IST

கண் திருஷ்டி, வீட்டில் இருக்கும் துர் தேவைதைகளின் விளையாட்டு போன்றவற்றை சரி செய்யக்கூடிய ஆன்மிகம் சார்ந்த பரிகாரத்தை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள உள்ளோம்


எல்லாமும் கிடைப்பது போல் இருக்கும் ஆனால் இறுதியில் கை நழுவி சென்று விடும். வீட்டு வாசல் வரைக்கும் வந்த மஹாலக்ஷ்மி நம் வீட்டிற்குள் வந்திருக்க மாட்டாள். கடைசி நேரத்தில் வாய்ப்புகளை தவற விட்டு கஷ்டப்படக்கூடிய தருணம் மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரிடமும் உண்டு. இப்படி நமக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் கிடைக்காமல் போவதற்கு என்ன காரணம் ? கண் திருஷ்டி ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது வீட்டில் இருக்கும் துர் தேவைதைகளின் விளையாட்டாக கூட இருக்கலாம்.

இதையெல்லாம் சரி செய்யக்கூடிய ஆன்மிகம் சார்ந்த பரிகாரத்தை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள உள்ளோம்.செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். எனினும் சுக்கிர ஹோரையில் செய்தல் மிகச் சிறப்பாகும். இல்லையென்றால் காலை அல்லது மாலை நேரத்தில் பூஜையின் போது கூட இந்த பரிகாரத்தை செய்யலாம்.

ஒரு மஞ்சள் நிறுத் துணியில் சிறிது கல் உப்பு, சின்ன வசம்பு துண்டு, 3 மிளகு வைத்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
இதனை பூஜை அறையில் இருக்கும் மகாலக்ஷ்மியின் திருவுருவ படத்திற்கு முன்பு வைத்து விட வேண்டும்.
 

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீங்க வேண்டுமா? வீட்டு கிட்சனில் இருக்கும் பொருட்களை இப்படி யூஸ் பண்ணுங்க!

Tap to resize

Latest Videos

வழக்கம் போல் தெய்வங்களுக்கு பூ போட்டு ,விளக்கேற்றி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பூஜை முடிந்த பின்பு, கற்பூரம் ஏற்றக் கூடிய தூபக் காலில் இந்த முடிச்சு போட்டு வைத்த துணியை போட்டு சிறிது நெய் விட்டு அதன் மேல் ஒரு பச்சை கற்பூரம் வைத்து பற்ற வைத்து விடுங்கள். சில நொடிகளில் சிறிது தேன் ஊற்றி நெருப்பினை ஷாந்தி செய்து கொள்வதற்காக .

தூபக் காலினை ஒரு தாம்பூல தட்டில் வைத்து அதிலிருந்து வரும் புகையை வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்து சென்று காட்டி விட்டு இறுதியில் பூஜை அறைக்கு அறைக்கு வைத்து விட வேண்டும்.

இந்த புகையின் முன் வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் 5 நிமிடங்கள் அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் விரைவில் சரியாக வேண்டும். துன்பங்கள் எல்லாம் தவிடுபொடியாக வேண்டும் ,துன்பங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்று பிராத்தனை செய்து கொண்டால் வீட்டிலும், குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களும் வெளியில் சென்று விடும்.

தவிர தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் தடை இருந்தாலும் அது விலகும். வீட்டில் நிம்மதி கிடைக்கும். சண்டை சச்சரவு இருந்த குடும்பம் கூட சகல ஐஸ்வர்யத்தையும் பெரும். உங்களுக்கு பணம், காசு சம்மந்தமான பிரச்னை அல்லது சுபகாரிய தடை அல்லது குழந்தைகள் ஆரோக்கிய பிரச்சனைகள் இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் அது சரியாவதற்கு அதிகமாகவே வாய்ப்புகள் உள்ளன.

வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த மாதிரி புகையை போடுங்கள். தேவைப்பட்டால் இந்த சின்ன மேல் சாம்பிராணி தூபம் கூட தூவி விடலாம். அது வாசத்தையும் புகையையும் உண்டு பண்ணி உங்கள் வீட்டை கோவிலாக மாற்றி விடும்.

இதனை மூன்று வெள்ளிக் கிழமைகளில் அல்லது செவ்வாய்க் கிழமைகளில் முயற்சி செய்து பாருங்கள். ஒரு நல்ல முன்னேற்றம் காணப்படும் என்று நிச்சயம் காணப்படும் என்ற கருத்தோடு நிறைவு அடைகிறது.

click me!