இந்த 1 ரூபாய்ல உங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்.. ஒரு தடவை நம்பிக்கையா இதை பண்ணி பாருங்க!

Published : Mar 16, 2023, 06:07 PM ISTUpdated : Mar 16, 2023, 06:19 PM IST
இந்த 1 ரூபாய்ல உங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்.. ஒரு தடவை நம்பிக்கையா இதை பண்ணி பாருங்க!

சுருக்கம்

astrological remedies: வாழ்க்கையில் பல அடிகள் வாங்கி துவண்டு போய் இருப்பவர்கள் இந்த 1 ரூபாய் பரிகாரத்தை செய்தால் சுபிட்சமாக வாழ்வார்கள். 

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. இந்த உலகில் வாழும் எல்லாம் மனிதர்களுக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதே பிரச்சனைகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது தான், என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் நின்று விடுவோம். இது மாதிரியான குழப்பமான மனநிலையில் இறைவன் தவிர வேறு யாராலும் நம்மை ஆறுதல்படுத்த முடியாது. இறைநம்பிக்கை தான் ஒவ்வொரு முறையும் துவண்டு போன மனிதனை அங்கிருந்து அழைத்து வருகிறது. 

சில தாந்திரீக பரிகாரங்கள் நம்மை பிரச்சனைகளில் இருந்து மீட்டு கொண்டு வரும். அந்த மாதிரி பரிகாரம் தான் இந்த ஒரு ரூபாய் நாணயம் பரிகாரம்.. இதனை நம்பிக்கையுடன் செய்தால் கை மேல் பலன் கிடைக்கும். இந்த பரிகாரம் செய்ய சேதமாகாத ஒரு கொழுந்து வெற்றிலையை காம்புடன் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ரூபாய் நாணயம் (1), ஏலக்காய் (1), விரலி மஞ்சள் (1) ஆகியவையும் எடுத்து கொள்ளுங்கள். இந்த பரிகாரம் செய்ய நாள், கிழமை எல்லாம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். 

சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உட்காந்து பயபக்தியுடன் வெற்றிலை மீது ஒரு ரூபாய் நாணயத்தையும், விரலி மஞ்சள், ஏலக்காய் ஆகியவற்றையும் வைத்து கொள்ளுங்கள். இதனை ஒரு மஞ்சள் நாள் கொண்டு முடிச்சு போல கட்டி வையுங்கள். இப்படி கட்டி வைக்கும் சமயம்.. நீங்கள் எந்த பிரச்சனையால் அவதிப்பட்டு அது சரியாக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ அதை மனதிற்குள் வேண்டிக் கொள்ளுங்கள். அதை சொல்லியபடி முடிச்சை கட்ட வேண்டும். 

ஒரு ரூபாய் பரிகாரம்

இந்த முடிச்சை, உங்களுடைய வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கோயில் அரசமரத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றிய பின் நீங்கள் கொண்டு சென்ற முடிச்சை அரசமரத்தின் அடியில் வைத்துவிடுங்கள். அப்படி வைக்கும் போது உங்கள் வேண்டுதல் நடக்க வேண்டும் என மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த முடிச்சை அங்கே வைத்த பிறகு வீட்டிற்கு வந்து விடுங்கள். குறிப்பாக அரச மரத்தடியில் இந்த முடிச்சை மாலை 6 மணிக்குள்ளாக வைப்பது முக்கியம். அந்த மணிக்கு மேலாக விருச்சகங்களிடம் சென்று எந்த வேண்டுதல் செய்தாலும் பலன் கிடைக்காது. இந்த பரிகாரத்தை வாழ்வில் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்தாலும் பிரச்சனைகள் நீங்கி நலம் வாழ வழி கிடைக்கும். 

இதையும் படிங்க: சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டிய பத்மாவதி தாயார் கோயில்.. நாளை பிரம்மாண்ட கும்பாபிஷேகம்..!

இந்த பரிகாரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது மாலை 6 மணிக்கு முன்னதாக பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் அரசமரம் மிகவும் பழமைவாய்ந்த மரமாக இருக்க வேண்டும். முன்னதாக இந்த அரச மரத்தின் கீழ் பரிகாரங்கள் செய்திருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

கடன் பிரச்சனை தீர பரிகாரம் 

செவ்வாய்கிழமை அன்று விநாயகருக்கு வெற்றிலை மாலை  போட்டு வழிபட்டால்  கடன் பிரச்சனை சுத்தமாக தீரும். அதுமட்டுமில்லை, சனி பகவான் மனம் குளிர சனிக்கிழமைகளில்  நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர கடன் பிரச்சனை முற்றிலும் நீங்கும்.

இதையும் படிங்க: சனி பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் வந்தாச்சு.. இனி வர்ற அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையே மாறப் போகுது..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sani Bhagavan: சூரியனின் வெப்பமும், சாயா தேவியின் தவமும்.! சனி பகவான் கரிய நிறமாக மாறிய கதை.! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Rasi palan May 2026: மே மாதம் கடைசி 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்