அதிகமானோர் இந்த பிரண்டை செடியை வீட்டில் வளர்ப்பார்கள்.இந்த செடியை வீட்டில் வளர்ப்பதும் வீட்டிற்கு நன்மையே . மூட்டுவலியை மட்டுமில்ல உங்களுடைய முன்ஜெனம வினைகளையும் பொசுக்கக்கூடிய சக்தி இந்த பிரண்டைக்கு உண்டு.இந்த பிரண்டையை வைத்து தாந்திரீக பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!
மனிதனுக்கு பிரச்சனை எந்த ரூபத்தில் எந்த இடத்தில இருந்து வரும் என்று எவராலும் கூற முடியாது. பிரச்சனைகள் வரும் போது அதை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். வேறு வழி கிடையாது.பிரச்சனைகளை சந்திக்க தயங்குபவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது. வரக்கூடிய பிரச்சனைகளை எதிர் கொள்ளும் அளவிற்கு மனிதனுக்கு மனதைரியம்.அவசியம் வேண்டும்.
அந்த தைரியத்தை கொண்டு வந்து வாழ்க்கையில் வரும் தீய வினைகளை அழிப்பதற்கு தான் இன்றைக்கு ஒரு சக்தி வாய்ந்த தாந்திரீக பரிகாரத்தை தான் . அதென்ன எப்படி செய்வது என்பதை தன இன்றைய பதிவில் காண உள்ளோம்.அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த பிரண்டைக்கு அதிக மகத்துவமும் உண்டு .அந்த மகத்துவம் தான் இந்த தாந்திரிக பரிகாரத்தில் செயல்பட போகின்றது.
பெரும்பாலும் அதிகமானோர் இந்த பிரண்டை செடியை வீட்டில் வளர்ப்பார்கள்.இந்த செடியை வீட்டில் வளர்ப்பதும் வீட்டிற்கு நன்மையே . மூட்டுவலியை மட்டுமில்ல உங்களுடைய முன்ஜெனம வினைகளையும் பொசுக்கக்கூடிய சக்தி இந்த பிரண்டைக்கு உண்டு.
இந்த பரிகாரம் செய்வதற்கு முன் முதலில் சுத்தமாக குளித்து விட்டு ஒரு சிறிய துண்டு பிரண்டை நமக்கு நிச்சயம் தேவை . பிரண்டையை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்துக் கொண்டு நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பிரண்டையின் வாசம் நீங்கள் சுவாசிக்கும் போது மூச்சில் கலக்க வேண்டும். இந்த சின்ன பிரண்டைகளை ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து அதனருகில் பிரண்டையை வைத்து நீங்கள் கிழக்கு பார்த்து அமர்ந்து , அகல் விளக்கை பார்த்த படியே ஓம் நமசிவாய என்ற இந்த பஞ்சாஸ்ர மந்திரத்தை சொல்ல வேண்டும். எம்பெருமானின் எந்த மந்திரத்தை வேண்டுமென்றாலும் கூறலாம்.
சிவ சிவ !
சிவாய நமஹ!
என்று எதை வேண்டுமென்றாலும் கூறலாம். அல்லது இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை கூட கூறலாம். அந்த பிரண்டையில் இருந்து வெளிவரக்கூடிய சுவாசத்தை சுவாசித்து சொல்லக்கூடிய மந்திரத்திற்கு ஒரு தனி சக்தி உண்டு எத்தனை முறை வேண்டுமென்றாலும் மந்திரத்தை சொல்லலாம். இப்படி செய்வதால் மந்திரமானது விரைவில் சித்தியாகி விடும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த தாந்திரிக பரிகாரத்தை செய்யலாம். முதல் நாள் எந்த மந்திரத்தை கூறுகிறீர்களோ அதே மந்திரத்தை தான் மீண்டும் கூறி வர வேண்டும்.
இந்த வழிபாட்டை மேற்கொள்வோருக்கு வால்;வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி தான் கிடைக்கும். 4 திசைகளில் இருந்தும், 8 திக்கிலிருந்தும் வரும் கஷ்டங்கள் உங்களை நோக்கி வரும் தருணத்தில் கூட கஷ்டங்களில் இருந்து வெளிவரக்கூடிய வழியினை எம்பெருமான் உங்களுக்கு காட்டி கொடுப்பார். இந்த பிரபஞ்சம் நேர்மறையாக உங்களுடைய வாழ்க்கையில் செயல்பட தொடங்கி விடும். இந்த பரிகாரம் செய்ய தொடங்கிய 2 வாரங்களில் உங்களுடைய மனதிலும்,உடம்பிலும் ஏறபடக்கூடிய மாற்றத்தை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள் வாழ்க்கையில் நல்லது எல்லாம் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும்.