Karadaiyan Nombu 2023: காரடையான் நோன்பு நாள் எப்போது? எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
காமாட்சி அம்மனுக்கு வேண்டிக்கொண்டு தான் சுமங்கலி பெண்கள் காரடையான் நோன்பு இருப்பார்கள். கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைத்து தாங்கள் சாகும் வரை தீர்க்க சுமங்கலியாகவே இருக்க இந்த நோன்பிருந்து பெண்கள் மனதார பிரார்த்தனை செய்வார்கள். இந்த நோன்பிற்கு சாவித்திரி விரதம், கெளரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு போன்ற பல பெயர்கள் உண்டு. ஆனால் பரவலாக காரடையான் நோன்பு என குறிப்பிட்டு அழைக்கிறார்கள்.
காரடையான் நோன்பு வரலாறு
காரடையான் நோன்பு என்றாலே சத்யவான், சாவித்ரி கதை தான் பலரின் நினைவுக்கும் வந்து சேரும். வனப்பு மிகுந்த இளவரசி சாவித்ரி, பக்கத்து தேச இளவரசன் சத்யவான் மீது காதல் கொண்டு மணம் செய்கிறாள். ஆனால் திருமணம் ஆன சில நாளில் சத்யவானின் பெற்றோர் கண் பார்வை இழக்கின்றனர். இதில் மனம் நொந்து போய் இருக்கும் போது அவர்களின் தேசத்தையும் இழந்துவிடுகிறார்கள்.
இத்தனை துன்பத்திற்கு பின் அங்கிருந்து வெளியேறி வனத்தில் தான் தன் காதல் கணவருடன் சாவித்திரி வாழ்ந்தார். விதி விளையாடியது. சீக்கிரமே சத்யவானும் இறக்க போகிறார் என சாவித்திரி அறிந்து கொள்கிறாள். தன் கணவருக்காக நோன்பிருந்தாள். எமன், சத்யவானின் உயிரை கையில் பறித்து எமலோகம் செல்லும்போது, உடன் சாவித்ரியும் துரத்தி கொண்டே போகிறாள். இப்படி இறக்காமல் பூத உடலுடன் ஒரு பெண் எமலோகம் எப்படி வரமுடியும்? சாவித்திரி வந்ததைக் கண்டு அதிர்ந்தார் எமன். அவர்களுக்குள் வாக்குவாதம் வரவே... நோன்பிருந்து தெய்வசக்தி பெற்ற சாவித்திரி கணவனின் உயிரை மீட்டாள். கணவரின் உயிரை எமனிடம் கடுமையாக வாதாடி போராடி சாவித்ரி பெற்ற தினம் தான் காரடையான் நோன்பாக கொண்டாடுப்படுகிறது.
காரடையான் அடை
அம்பிகைக்கு நன்றி சொல்லும் விதமாக காரடையான் நோன்பிருந்தாள். சுமார் 3 தினங்கள் விரதம் இருந்த சாவித்திரி, கார் அரிசியின் மாவுடன், வெல்லம் காராமணி ஆகியவை போட்டு குட்டி குட்டி அடைகளாகத் தட்டி கொண்டாள். அதை வேக வைத்து அம்பிகைக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட்டாள். கார் அரிசியில் செய்த அடை என்பதால் காரடையான் நோன்பு என சொல்கிறார்கள். இதில் வெல்லத்திற்கு பதிலாக உப்பு போட்டு உப்படையும் செய்வார்கள்.
காரடையான் நோன்பு எப்போது?
மாசி மாதத்தின் இறுதி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் சேரும் தினத்தில் தான் காரடையான் நோன்பு வருகிறது. இந்தாண்டில் நாளை (மார்ச் 15) புதன்கிழமை அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. நாளை காலை 06.29 மணி முதல் 06.47 மணி வரை வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: உங்க குலதெய்வ கோயிலிலிருந்து இந்த 1 பொருளை கொண்டு வந்தால் போதும்.. கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாம காணம போகும்
யாரெல்லாம் விரதம் இருக்கலாம் ?
பெண்கள் இந்த விரதம் இருக்கலாம். முக்கியமாக கணவனை நேசிக்கும் சுமங்கலி பெண்கள் அவர் நீண்ட ஆயுள் பெறவும், திருமணமாகாத பெண்கள் நல்ல துணை அமையவும் காரடையான் நோன்பை கடைபிடிப்பார்கள்.
தாலி சரடு மாற்றும் நாள்
காரடையான் நோன்பு நாளில் சுமங்கலி பெண்கள் தாலி சரடு மாற்றி கொள்ளலாம். இந்த நோன்பிற்காக அணிந்த மஞ்சள் சரடை எப்போதும் போடலாம். இல்லையென்றால் 3 நாட்கள் அணிந்து விட்டு கழற்றியும் வைக்கலாம்.
விரதம் இருப்பது எப்படி?
இதையும் படிங்க: வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிந்து கொண்டால் போதும்.. உங்களுக்கு புகழும் அதிர்ஷடமும் தேடி வரும்..