Latest Videos

குழந்தை பாக்கியம் கிடைக்க சக்தி வாய்ந்த எளிய பரிகாரம்.. உடனே செய்ங்க..

By Kalai SelviFirst Published Jun 21, 2024, 10:05 AM IST
Highlights

குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று மனதில் இருக்கிறீர்களா உங்களுக்கான ஒரு அற்புதமான பரிகாரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

திருமண வாழ்க்கையில் நுழைந்த பிறகு ஒவ்வொரு தம்பதியரும் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று விரும்புகிறார்கள். குறிப்பாக, ஒரு பெண் தாயாகும் போது தான் அவளது வாழ்க்கை முழுமை அடைகிறது என்று நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செல்வதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். 

ஆனால் இந்த தாய்மை வரம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு தான் சிலருக்கு கிடைக்கிறது.. இன்னும் சிலருக்கோ கடைசி வரை கிடைக்காமல் போய்விடுகிறது. இப்படி கடைசி வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் மன வேதனையை வெறும் வார்த்தைகளால் மட்டும் விவரிக்க முடியாது.

இதையும் படிங்க:  கெட்ட கனவுகள் வராமல் இரவு நிம்மதியாக தூங்க.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க.. ரொம்ப சிம்பிள்!

அந்த வகையில் உங்களுக்கும் நீங்களும் குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? எத்தனையோ மருத்துவம் பரிகாரங்கள் செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருக்கிறீர்களா? உங்களுக்கான சில எளிய பரிகாரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இதை நீங்கள் நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியத்தை பெறுவீர்கள்.

நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் சரி குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றால், உங்கள் ஜாதகத்தில் பிரகஸ்பதி நல்ல முறையில் இருக்க வேண்டும்.  பிரகஸ்பதி அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். பிரகாஷ் பத்தி நல்ல முறையில் இருந்தால் இந்த பரிகாரம் பலனளிக்கும்.

இதையும் படிங்க:  ஒரு கைப்பிடி அரிசி போதும்..உங்கள் எல்லா பிரச்சனைகளையும் விரட்ட.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க!

பரிகாரம் செய்யும் முன் செய்ய வேண்டியது:
இந்த பரிகாரம் செய்வதற்கு முன் தம்பதிகள் இருவரும் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். முக்கியமாக இந்த நாளில் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடக் கூடாது பிறகு ஒரு வளர்பிறை பட்சத்தில் தம்பதிகள் இருவரும் தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்று, முதலில் விநாயகருக்கு, பிறகு குலதெய்வத்திற்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். இதனை அடுத்து வள்ளி தெய்வானையையும், முருகனுக்கும் சஷ்டியன்று விரதம் இருந்து அர்ச்சனை செய்ய வேண்டும். இவை அனைத்தும் செய்த பிறகு தான் பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலே சொன்ன படி அனைத்தையும் செய்து முடித்த பிறகு, மறுநாள் காலை தானியங்களை ஒரு துணியில் கட்டி முடிச்சு போட்டு யாரும் பார்க்காத வகையில் அதை ஒரு இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.  இதை பெண் தான் செய்ய வேண்டும் ஆன் செய்யக்கூடாது இதை ஐந்து முறை தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைத்த பிறகு வீட்டில் இருக்கும் இந்த முடிச்சுகளை ஓடும் ஆறு அல்லது கடலில் வீசிட வேண்டும். இதையும் பென் தான் செய்ய வேண்டும், ஆண் அல்ல.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!