சென்னையில் ஸ்ரீ பத்ராச்சலா ராமர் தரிசனம்.. எப்போது தெரியுமா..?

By Kalai Selvi  |  First Published Jun 20, 2024, 6:06 PM IST

சென்னையில், ஸ்ரீ பத்ராச்சலா ராமர் நிகழ்வு நிகழ்ச்சி ஜூன் 28 முதல் 30 வரை என மூன்று நாட்கள் நடைபெறும்.


சென்னையில் முதல் முறையாக பக்த பாத சேவா அறக்கட்டளை சார்பில், தி. நகரில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கல்யாண மண்டபத்தில், ஸ்ரீ பத்ராச்சலா ராமர் நிகழ்வு நிகழ்ச்சி ஜூன் 28, 29 மற்றும் 30 என வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் நடைபெறும்.

மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பகவான் பத்ராசல ராமர் விஷேஷ பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, பத்ராச்சலா ராமர் மற்றும் 20 அடி அனுமான் தரிசம் கிடைக்கும். மேலும், நிகழ்வில் 1008 புடவையால் சீதா தேவிக்கு அர்ச்சனை செய்யப்படும்.

Latest Videos

undefined

108 விளக்கு பூஜை, புத்தகமஸ்தியாக்கம், சீதா கல்யாணம், ராமர் பட்டா அபிஷேகம் மற்றும் வெவ்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.

மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்த விழாவில் ராமரின் மகிமை குறித்த சொற்பொழிவுகளும் கச்சேரியும் நடக்க உள்ளது. இவ்விழாவில் கட்டணம் ஏதுமின்றி ராம பக்தர் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை.. ஸ்ரீ ராமாயண யாத்திரை.. குறைந்த விலையில் ஆன்மீக டூர்..

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், 7358477073 என்ற என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மற்றும் www.alankarakriya.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: 15 கிலோ தங்கம்.. 18,000 வைரம், மரகத கற்கள்.. அயோத்தி பால ராமர் சிலையை அலங்கரிக்கும் நகைகள் பற்றி தெரியுமா?

ஸ்ரீ பத்ராச்சலா ராமர் கோயில்: 
ஸ்ரீ பத்ராச்சலா ராமர் கோயில் கோதாவரியின் திவ்ய கேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது தட்சிண அயோத்தியாகவும் மதிக்கப்படுகிறது. மைய சின்னம் நான்கு ஆயுதமேந்திய வைகுண்ட ராமரைக் கொண்டுள்ளது. விஷ்ணு வடிவம் பத்ரா பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க தோன்றியது. ராமாஸ் கன்சர்ட் சீதா மற்றும் சகோதரர் லட்சுமணன் ஆகியோர் மத்திய சின்னத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!