தொடர்ந்து 48 நாட்கள் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போடுங்க.. வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலகி ஓடும்!

By Kalai Selvi  |  First Published Jun 19, 2024, 12:14 PM IST

வீடு அல்லது தொழில் செய்யும் இடத்தில் எப்படிப்பட்ட பிரச்சனை இருந்தாலும் சரி, கெட்ட சக்தியாக இருந்தாலும் சரி, அதை ஒரே நொடியில் சரி செய்ய இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போடுங்கள்.


இன்றைய காலகட்டத்தில், வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் பழக்கம் முற்றிலும் இல்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில், சிலர் தங்களுடைய வீடுகளில் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில், நாம் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக சித்தர்கள் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் மூலிகை சாம்பிராணி. இது வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி நல்ல சக்தியை பெருக்கும். இந்த மூலிகை சாம்பிராணி எப்படி செய்வது என்பதற்கான பதிவு தான் இது.

மூலிகை சாம்பிராணி நன்மைகள்: 
சித்தர்கள் நமக்கு அருளிய மூலிகை சாம்பிராணி வீட்டில் போடுவதால் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்க நிவாரணம் கிடைக்கும். இந்த சாம்பிராணியை தயாரிக்க ஏழு விதமான மூலிகை பொருட்கள் பயன்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

அதுமட்டுமின்றி, இந்த சாம்பிராணி பொடியை வீட்டில் பயன்படுத்தினால் பலன்கள் பல கிடைக்கும். அதாவது, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்து நிற்கும், குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவுகள் இருக்காது, தூக்கமின்மை, நிம்மதியின்மை, வியாதிகளின் தொல்லை போன்ற ஒன்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக எதிர்மறை எண்ணங்களை நீக்கி நல்ல மனநிலையை தரும் சக்தி இதற்கு உண்டு. மேலும், இதை கடைகள் மற்றும் வியாபாரம் செய்யும் இடத்தில் பயன்படுத்தினால் வியாபாரம் பெருகுமாம். 

இதையும் படிங்க:  உங்க வீட்டில் சாம்பிராணி போட்டால் முதல்ல 'இத' படிங்க.. அப்புறம் போடுங்க! உங்க நல்லதுக்கு தான்!

அறிவியல் படி.., அறிவியல் ரீதியாக பார்க்கும் போது, இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்  வீட்டில் இருக்கும் கெட்ட காற்று நீங்கும்.  மேலும் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வராமல் தடுக்கப்படுகிறது.  சரி வாங்க இப்போது, இந்த மூலிகை சாம்பிராணி செய்வதற்கான தேவையான பொருட்கள் என்னென்ன மற்றும் அதை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..

மூலிகை சாம்பிராணி செய்ய தேவையான பொருட்கள்:
வெண்கடுகு, நாய் கடுகு, மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வ பொடி, வேம்பு பொடி, குங்கிலியம்.

செய்முறை:
சித்தர்களின் மூலிகை சாம்பிராணி செய்ய முதலில் மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் பொடியாக அரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை காற்று போகாதபடி ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனை இருக்கா..? சாம்பிராணி போடுங்கள்..! ஆயுர்வேத மருத்துவ ரகசியம் தெரியுமா..?

பயன்படுத்தும் விதம்:
இந்த மூலிகை சாம்பிராணியை வாரத்திற்கு மூன்று நாட்கள் காலை மாலை என இருவேளையும் போட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த தூபத்தை போட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக, 48 நாட்கள் இந்த தூபத்தை போட்டு முடித்துவிட்டு அப்படியே இருந்து விடக் கூடாது. வாரம் தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த தூபத்தை வீட்டு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் போட்டு வந்தால், மிகவும் நல்லது.

இந்த மூலிகை சாம்பிராணி கெட்ட சக்திகளை விரட்டுவதற்கு மட்டுமல்ல, வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவதற்கு, இதைத்தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!