சிறுநீரக பிரச்சினையை தீர்க்கும் சக்தி வாய்ந்த கோவில் ஊட்டத்தூர் நடராஜர்! உடனே போங்க..

Published : Jun 14, 2024, 09:28 AM ISTUpdated : Jun 14, 2024, 05:07 PM IST
சிறுநீரக பிரச்சினையை தீர்க்கும் சக்தி வாய்ந்த கோவில் ஊட்டத்தூர் நடராஜர்! உடனே போங்க..

சுருக்கம்

சிறுநீரக கோளாறுகள், தோஷங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு ஊட்டத்தூரில் எழுந்தருளியுள்ள நடராஜர் தான்.

நடராஜர் கோவில் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிதம்பரத்தில் இருப்பதுதான். காரணம், இந்த நடராஜர் கோவில், அதன் உருவாக்கத்திற்காக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. ஆனால், தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தைக் கொண்டுள்ளது. மேலும், இந்த கோவிலானது, தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கும் தெரியாதது ஒன்றாகும். ஆம், இந்த கோவிலில் இருக்கும்  நடராஜரின் உருவமே, நாம் வாழும் இந்த பிரபஞ்ச தத்துவத்தை முழுவதுமாக விளக்கும்.

பொதுவாகவே, பல கோவில்களில் இருக்கும் நடராஜர் சிலையானது ஐம்பொன்னால், கல்லாலும் தான் செய்யப்பட்டிருக்கும். அனால், இங்கு இருக்கும் நடராஜர் சிலையானது மனிதக் கலையால் செய்யப்பட்டதல்ல. பிறகு எப்படி என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த கோவிலில் இருக்கும் நடராஜர் சிலையானது, பல கோடி சூரிய சக்திகள் கொண்டு உருவாக்கப்பட்டது  என்று புராணங்கள் கூறுகின்றது. இந்த அபூர்வ நடராஜர் சிலையை கொண்டிருக்கும் கோவில் வேறு எங்குமில்லைங்க, நம்முடைய தமிழ் நாட்டில் இருக்கும் திருச்சி மாவட்டத்தில் தான் உள்ளது. 

இதையும் படிங்க:  உலகின் முதல் சிவன்கோயில்.. மரகத நடராஜர் சிலை பற்றிய சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

தானாகவே உருவாகிய அற்புத சிலை:
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் இந்த சிலையானது உளி கொண்டு செதுக்கப்பட்டதல்ல. சித்தர்களின் நவலிங்க பூஜையால், சித்தர்கள் வழிபாட்டிற்கு பிறகு தானாகவே உருவாகிய ஒரு அற்புதமான சிலை என்று சொல்லுகிறார்கள். மேலும், இந்த சிலை உருவான பாறையானது, 'பஞ்சநத பாறை' என்று கூறுகிறார்கள்.  உங்களுக்கு தெரியுமா.. இந்த பாறை மிகவும் அபூர்வமான ஒரு பாறையாகும். எப்படியெனில், நாம் வாழும் இந்த பூமியில் 10 லட்சம் பாறை உருவானால், அதில் ஒன்று தான் இந்த பஞ்சநாத பாறை.

இதையும் படிங்க:  உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை.. 23 அடி உயரம், 15 டன் எடை.. கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள் !!

பலன்கள்:

  • திருச்சியில் இருக்கும் இந்த கோவிலில் ஒரு முறை பிரதோஷ வழிபாடு செய்தால், கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமானார் கூறினார்.
  • அதுமட்டுமின்றி, வளர்பிறையில் இந்த கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி வழிப்பாடு செய்யும்போது பல வகையான தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
  • முக்கியமாக, இந்த கோவிலில் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய பிரம்ம தீர்த்தம் உள்ளதாம்.
  • மேலும், இந்த கோவிலில் இருக்கும் அபூர்வ நடராஜருக்கு வழங்கப்படும் வெட்டி வேரை, நீரில் ஊறவைத்து குடித்து வந்தால், சிறுநீரக கோளாறுகள் அடியோடு குணமாகும் என்பது ஜதீகம்.
  • அதுபோல, இந்த கோவிலில் இருக்கும் கொடி மரம் அருகில் மேல் விதானத்தில் 27 நட்சத்திரம், 15 திதிகள், 12 ராசிகள், 9 கிரஹங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி, இந்த மரத்தின் கீழ் நின்று வழிபடும்போது ஜாதகமே மீண்டும் ஒரு முறை புதிய ஜாதகமாக உருவாக்கப்படுகிறது என்பது நம்பிக்கை. 

இந்த கோவிலுக்கு செல்லும் வழி: இந்த கோவில் ஆனது, திருச்சி மாவட்டம் திருச்சி-சென்னை வழியில் உள்ள பாடலூரில் இருந்து, சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!