பூஜை அறையில் மறந்தும் கூட இந்த சிலைகளை வைக்காதீர்கள்... ஏன் தெரியுமா..?

By Kalai Selvi  |  First Published Jun 7, 2024, 10:26 AM IST

வீட்டின் பூஜையறையில் எந்தெந்த சிலைகளை வைக்கக்கூடாது என்பதைக் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.


இந்து மதத்தை பின்பற்றுவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருக்கும். வீட்டில் உள்ள இந்த இடம் நேர்மறை ஆற்றலின் களஞ்சியம் ஆகும். அதுமட்டுமின்றி தினமும் தூபமிட்டு, தீபங்களை ஏற்றி வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பாய்ந்து வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல், வீட்டு  பூஜை அறையில் பலவிதமான தெய்வங்களின் சிலைகளை வைத்து வழிப்படுவார்கள். ஆனால் சில தெய்வங்களின் சிலைகளை மட்டும் பூஜை அறையில் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. அது என்னவென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  பூஜை அறையில் 'இந்த' பொருட்களை வைக்காதீங்க.. வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும்.. பணம் தங்காது.. ஜாக்கிரதை!

Tap to resize

Latest Videos

வீட்டின் பூஜையறை எந்த திசையில் இருக்க வேண்டும்:
வீட்டில் இருக்கும் பூஜை அறை வடகிழக்கு, கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய திசையில் தான் இருக்க வேண்டும். ஆனால், வடக்கு அல்லது தென்திசையில் ஒருபோதும் இருக்கக் கூடாது. அதுபோல வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செல்வத்திற்காக எந்தெந்த சிலைகளை வைக்க கூடாது என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க..

இதையும் படிங்க: யாருகெல்லாம் அதிர்ஷ்டம் வேண்டும்...அப்ப 'இந்த' 6 சிலைகளை வீட்டின் பூஜை அறையில் வையுங்க..!!

வீட்டின் பூஜையறையில் எந்தெந்த சிலைகளை வைக்கக்கூடாது:

  • வீட்டின் பூஜை அறையில் உக்கிரமாக இருக்கும் தெய்வங்களின் சிலைகளில் ஒருபோதும் வைக்கக் கூடாது. இது வீட்டில் மன அமைதியின்மையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும்.
  • அதுபோல காளி, பைரவர் ராகு-கேது போன்ற கோபமான தெய்வங்களின் சிலையையோ அல்லது படங்களையோ பூஜை அறையில் வைக்க வேண்டாம்.
  • சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஆனால், ஜோதிடம் படி சனி பகவானின் சிலையை வீட்டில் வைக்கக் கூடாது. அப்படி வைத்து வழிபடுவது அசுபமாக கருதப்படுகிறது.
  • ஜோதிட சாஸ்திரங்களின்படி நரசிம்மரின் சிலையை வீட்டில் வைத்து ஒருபோதும் வழிபடக்கூடாது. காரணம் நரசிம்மனின் உக்கிரமான அவதாரத்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் வழி வகுக்கும்.
  • வீட்டின் பூஜை அறையில் தவறுதலாக கூட சிவனின் நடராஜர் சிலையை வைக்க கூடாது. காரணம் இது சிவபெருமானின் களியாட்டத்தை குறிக்கிறது. எனவே, இதை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் முரண்பாடுகள் ஏற்படும்.
  • லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். இதனால்தான் எல்லாருடைய வீடுகளிலும் லட்சுமி தேவியின் சிலை அல்லது படம் வைத்து வழிபடுவார்கள். ஆனால், தாமரையின் மீது அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியின் படத்தை ஒருபோதும் வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது நல்லதல்ல.
  • அதுபோல, லட்சுமிதேவி நிற்கும் சிலையை வீட்டில் பூஜை அறையில் ஒருபோதும் வைக்க வேண்டாம். மீறினால், அது நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கொண்டு வரும்.
  • முக்கியமாக, வீட்டில் பூஜை அறையில் எந்த ஒரு உடைந்த சிலையை ஒருபோதும் வைக்க கூடாது. அப்படி வைத்தால் உடனே அதை வெளியே போட்டு விடுங்கள். வீட்டில் உடைந்து சிலை பூஜை அறையில் உடைந்த சிலையை வைத்தால் உறவுகளில் சண்டைகளுக்கு வழிவகுக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!