நிலக்கோட்டை அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் 400-ஆண்டு பழமையான காளியம்மன், பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் அம்மன் பூங்கராத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த கொடைரோடு அருகே உள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான காளியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. ஊரின் காவல் தெய்வமான இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழா நேற்று முதல் வெகுவிமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அழகர்கோவில் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மீன்களை அள்ளிச் சென்றனர்
undefined
விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளி தாரை, தப்பட்டை, வான வேடிக்கைகள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு, தீசட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர், அதனைத் தொடர்ந்து மாலை பொங்கல் வைக்கும், கிடாய்வெட்டும் வைபவமும் நடைபெற்றது,
இத்திருவிழாவில் புதுமையை குறிக்கும் வகையில் அம்மனுக்கே ஆதார் கார்டு அடித்து வைக்கப்பட்டிருந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் திருவிழாவில் இரவு நடந்த கலைநிகழ்ச்சியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு தத்துருபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். மேலும் இத்திருவிழாவிற்கு சென்னை, மதுரை, கோவை, தேனி, நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.