மறந்தும் கூட 'இந்த' பொருட்களை பிறருக்கு கடனாக கொடுக்காதீங்க! வீட்டில் தரித்திரம் வருமாம் தெரியுமா..?

By Kalai Selvi  |  First Published May 28, 2024, 11:56 AM IST

இந்த பதிவில், பிறருக்கு கடனாக கொடுக்க கூடாத பொருட்கள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்..


பொதுவாகவே, வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகோ அல்லது மாலை 6 மணிக்கு மேல் யாராவது ஏதாவது ஒரு பொருளை கேட்டாலோ அல்லது கடனாக ஏதாவது ஒன்றை கேட்டாலோ கொடுக்க கூடாது என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒருவேளை அப்படி கொடுத்தால் வீட்டில் இருக்கும் செல்வமும் அதோடு சேர்ந்து போய்விடும், பிறகு வீட்டில் தரித்திரம் தான் வரும் என்பதே இதற்கு காரணம். இப்போது இந்த பதிவில், பிறருக்கு கடனாக கொடுக்க கூடாத பொருட்கள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்..

பிறருக்கு கடனாக கொடுக்க கூடாத பொருட்கள்:

Latest Videos

undefined

பொதுவாக, எல்லோருடைய வீடுகளிலும் அரிசி இருக்கும். அரிசியை நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கடனாக கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள மகிழ்ச்சி அவர்களுடனே சென்று விடும். ஏனெனில், அரிசி சுக்கிரத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.  நீங்கள் பிறருக்கு அரிசியை கடனாக கொடுத்தால் உங்களுக்கு சுக்கிரதோஷம் ஏற்படுவது மட்டுமின்றி, உங்களது வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகளும் வரும்.

எள், கடுகு எண்ணெய் ஆகியவை சனி பகவானுக்கு தொடர்புடையது என்பதால், இதை பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. குறிப்பாக, சனிக்கிழமை அன்று கொடுக்கவே கூடாது. ஏனேனில், சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாளாகும். அதுபோல, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் உங்கள் அக்கம்பத்தினருக்கு கடனாகக் கொடுக்கக்கூடாது.

இதையும் படிங்க:  தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்.. நீங்களே செய்யலாம்..

மஞ்சள் வியாழன் கிரகத்தோடு தொடர்புடையது என்பதால், இதையும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கடனாக கொடுக்க வேண்டாம். இல்லையெனில், குரு தோஷம் ஏற்படும். பூண்டு, வெங்காயமும் கேதுவுடன் தொடர்புடையது என்பதால், இதையும் கடனாக அக்கம்பக்கத்தினருக்கு கொடுக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் இவற்றை கடனாக கொடுத்தால் உங்கள் வீட்டில் செழிப்பு அப்படியே நின்றுவிடும்.

இதனை அடுத்து உப்பு. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. எனவே, உப்பை ஒருபோதும் பிறருக்கு கடனாக கொடுக்க கூடாது. இல்லையெனில் , உங்கள் வீட்டில் நிதி நெருக்கடியை நீங்கள் சந்திக்க நேரிடும் ஜாக்கிரதை.vமேலும், துடைப்பத்தை யாருக்கும் ஒருபோதும் கடனாக கொடுக்க கூடாது. மீறி கொடுத்தால், வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படும்.

இதையும் படிங்க:   கடனில் மூழ்கி இருக்கிறீர்களா? என்ன செய்வதென்று தெரியவில்லையா? இந்த 5 வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்..!!

அதுபோல, நீங்கள் பயன்படுத்திய செருப்பு, துணிமணிகள், பூஜை பொருட்களை ஆகியவற்றை ஒருபோதும் பிறருக்கு கடனாகக் கொடுக்கக்கூடாது. நீங்கள் பூஜை சம்பந்தமான பொருட்கள் கொடுக்க விரும்பினால் கோவிலுக்கு கொடுங்கள்.

இவற்றை கொடுக்கலாம்:
நீங்கள் ஒருவருக்கு அன்னதானம் கொடுப்பதன் மூலம் அவரது பசி ஆறினால் உங்கள் வீட்டில் உள்ள வறுமை நீங்கும். கிழிந்த அல்லது பழைய துணிகளை கொடுப்பதற்கு பதிலாக, புதிய துணியை எடுத்துக் கொடுத்தால் உங்களது ஆயுள் பெருகும். பிறருக்கு தேன் தானமாக கொடுத்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!