பொதுவாகவே, மலை மீது அமர்ந்திருக்கும் முருகன் கோவிலை பற்றி தான் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஆற்றின் நடுவே இருக்கும் முருகன் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? இந்த பதிவில் அதை பற்றி தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
பொதுவாகவே, மலை மீது அமர்ந்திருக்கும் முருகன் கோவிலை பற்றி தான் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஆற்றின் நடுவே இருக்கும் முருகன் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? இந்த பதிவில் அதை பற்றி தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
திருநெல்வேலியில் மிக முக்கிய கோவில்களில் ஒன்று 'குறுக்குத்துறை முருகன்' கோவில். குறுக்குத்துறை என்ற பகுதியில் தான் இந்த முருகன் கோவில் அமைந்துள்ளதால், இந்த கோயில் குறுக்குத்துறை முருகன் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் தாமிரபரணி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது. ஆனால், கட்டுக்கடங்காத வெள்ளத்தையும் தாங்கிய படி பல ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கிறது இந்த குறுக்குத்துறை முருகன் கோவில்.
ஒவ்வொரு மழைக்காலங்களில் இந்த கோவில் தண்ணீரில் மூழ்குவது வாடிக்கை. வெள்ளப்பெருக்கு காலங்களில் இக்கோயிலிலிருந்து உற்சவர், சப்பரங்கள், உண்டியல் போன்றவற்றை அங்கிருந்து எடுத்து சென்று கரையில் அமைந்துள்ள, மேலக்கோயிலில் வைத்து விடுவார்கள். மூவர் சிலை மட்டும் அப்படியே அங்கு இருக்கும். வெள்ளம் வடிந்த பிறகு கோயிலை முழுமையாக சுத்தப்படுத்திய பிறகு உச்சவரை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வருவார்களாம்.
இதையும் படிங்க: முருகப்பெருமானுக்கு ஏன் 2 மனைவிகள்..? சுவாரஸ்யமான காதல் கதை இதோ..!!
எப்பேற்பட்ட, வெள்ளத்தையும் தாங்கும் வகையில் இந்த கோவில் கம்பீரமாக நிற்பதற்கு ஒரே காரணம் கோயிலின் கட்டமைப்பு ஆகும். எப்படியெனில், பொங்கி வரும் வெள்ளத்தை கிழித்துப் பிரிக்கும் வகையில் படகுகளின் முன்பகுதி கூர்மையாக இருப்பது போல, இக்கோயிலின் மேற்கு பகுதி மதிச்சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. வெள்ளம் மோதும் போது இந்த கூர்மையான சுவரில் பட்டு சிதறி ஓடிவிடும். அதனால் தான் கோயிலுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதுபோல மண்டபத்துனுள் புகுந்த வெள்ளம் மறுபுறம் வெளியேறும் வகையில் கற்சுவரில் ஜன்னல் வடிவிலான திறப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற நுட்பமான கட்டுமானத்தால் தான் பல ஆண்டுகளாக இந்த கோயில் எந்த வெள்ளத்தையும் எதிர்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, கோயிலின் ஸ்தூபி கல்லால் ஆனது என்பதால் எவ்வித சேதமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தமிழ் கடவுளான முருகன், இங்கு சுயம்புவாக தோன்றியதால் இந்த இடத்திலேயே முருகன் கோவில் கட்டப்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: விண்ணை முட்டும் அரோகரா கோஷம்.. பழனி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்.!
குறுக்குத்துறை முருகன் கோவிலானது பாறைகளை செதுக்கி கட்டப்பட்டதாகும். அதாவது, இந்த பாறைகளானது, தெய்வங்களின் உருவங்களை செதுக்குவதற்கு ஏற்றதாக இருந்ததால், சிற்பிகள் இந்த பாறைகளுக்கு உருவங்களை கொடுத்தார்கள். இன்னும் சொல்லபோனால், இந்த பாறையிலிருந்துதான் திருச்செந்தூரில் இருக்கும் முருகன் சிலை வடிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
வள்ளி, தெய்வானையோடு முருகன் இருக்கும் உருவத்தை சிற்பி செதுக்கியுள்ளார். பிறகு, இங்கே ஆற்றுக்கு குளிப்பதற்கு வரும் மக்கள் சிற்பி செதுக்கிய முருகனை வழிப்பட தொடங்கியதாகவும், பிறகு முருகனுக்கு அந்த கோவில் கட்டியதாகவும் அங்குள்ளவர்கள் சொல்லுகிறார்கள். அந்த பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கும் முருகன் வள்ளி, தெய்வானையுடன் கூடிய நான்கு கரங்களோடு நிற்கும் கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு சித்திரை மாதமும் கொடியேற்றப்பட்டு, 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதுபோல, இங்கு வைகாசி விசாகம் திருவிழா வெகு சிறப்பாக நடைப்பெறும். எனவே, நீங்கள் திருநெல்வேலிக்கு சென்றால், குறுக்குத்துறை முருகனை தரிசிக்க மறக்காதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D