மதுரை கூடலழகர் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு

By Velmurugan sFirst Published May 24, 2024, 11:07 AM IST
Highlights

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து 29ம் தேதி வரை 14 நாட்கள்  தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்மம், கருடன், அனுமார், சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய கருப்பண்ணசாமி; 7 வருடங்களுக்கு பின் நடைபெற்ற வினோத திருவிழா

Latest Videos

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள். ஸ்ரீ தேவி பூதேவி. தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

1 வருடம் லிவிங் வாழ்க்கை; நைசாக பேசி கர்பத்தை கலைத்துவிட்டு கம்பி நீட்டிய காதலன் - இளம்பெண் விபரீத முடிவு

தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்த தேரினை சாலைகளின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை அலங்கார திருமஞ்சனமும் 26ம் தேதி சுவாமி குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கி ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது. 27-ந்தேதி கருட வாகனத்தில் புறப்பாடு நடைப்பெறுகிறது. தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் கோயிலில் எழுந்தருள்கிறார். 28ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைப்பெறுகிறது. 29ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

click me!