அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய கருப்பண்ணசாமி; 7 வருடங்களுக்கு பின் நடைபெற்ற வினோத திருவிழா

By Velmurugan sFirst Published May 24, 2024, 10:37 AM IST
Highlights

நிலக்கோட்டை அருகே பங்களாபட்டி கிராமத்தில்  7-ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவில் அரிவாளில் ஏறி நின்று ஆடி அருள்வாக்கு கூறிய கருப்பண்ணசாமியிடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அருகே உள்ள பங்களாப்பட்டி கிராமத்தின் காவல் தெய்வமாக செல்லாயி அம்மன் கோவில் இருந்து வருகிறது. வைகாசி திருவிழா  ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

Latest Videos

நேற்று இரவு தொடங்கிய விழாவில் வானவேடிக்கைகள், மேளதாளத்துடன் அம்மன் பூங்கரகம் அழைத்து ஊர்வலம் நடைபெற்றது, நேற்று காலை முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், கும்மி அடித்தல் நிகழ்ச்சிகள்  நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற விழாவில்  சிறப்பு நிகழ்ச்சியாக பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சியுடன் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பணசாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கருப்பனசாமி அரிவாலில் ஏறி ஆடியும், சாட்டையால் அடித்தும் அருள்வாக்கு கூறி பிரசாதம் வழங்கினர், இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல், மதுரை, கோவை, திருச்சி,நெல்லைமூணாறு ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கனக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

click me!