உளுந்தூர்பேட்டை அருகே உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷாபுரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தாண்டவர் கோயில் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு லோகாம்பிகை வலமுறை ஸ்ரீ மாஷாபுரீஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோடை மழைக்கே தாக்குபிடிக்காத கலைஞர் நூற்றாண்டு நூலகம்; 2 பிரிவுகள் மூடப்பட்டதால் வாசகர்கள் ஏமாற்றம்
இதனைத் தொடர்ந்து பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருதேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பல்வேறு விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மேளதளங்களுடன் சுவாமியை தோளில் சுமந்தவாறு கோயிலை சுற்றி வளம் வந்து திருத்தேரில் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிவ பக்தர்களின் கைலாச வாத்தியங்கள் இசைக்க, சிவதாண்டவம் ஆடியபடி வலம் வந்தனர். அப்போது நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாயா, ஓம் நமசிவாய என பக்தி கரா கோஷங்கள் எழுப்பி திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.