Latest Videos

வாஸ்துபடி பூஜை அறையை இந்த இடத்தில் வைங்க..தெய்வ சக்தி நிறைந்திருக்கும்.. பண பிரச்சினை வராது!

By Kalai SelviFirst Published Jun 19, 2024, 9:58 AM IST
Highlights

வீட்டில் பூஜை அறை அமைக்க சரியான திசை, அதில் என்னென்ன இருக்க வேண்டும் எது என்பதை குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.

இந்து மதத்தை பின்பற்றுவோர் ஒவ்வொருவருடைய வீட்டிலும் பூஜை அறை இருக்கும். அதுபோல, வீட்டில் இருக்கும் பூஜை அறையை வாஸ்து படி, சரியான திசையில் இருந்தால் அதற்கு ஏற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும். 

வீட்டில் செல்வம் செழிப்பு மகிழ்ச்சி, நிம்மதி நிலைத்திருக்க அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்க வேண்டும். இதற்கு பூஜை அறையில் இருக்கும் சிலைகள், படங்கள், கலசங்கள் விளக்கு,  தீபம் ஏற்றும் முறை, பூஜை செய்யும் முறை ஆகியவை வாஸ்து படி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, வீட்டில் நிச்சயம் லட்சுமி கடாட்சம் இருந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் தெய்வ சக்தி இருந்தால் கெட்ட சக்திகள் ஓடிவிடும். மேலும் தேவ சக்தியை இருந்தால் மட்டுமே வீட்டில் நன்மைகள் பெருகிக்கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் பூஜை அறை மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. எனவே, வீட்டில் பூஜை அறை அமைக்க சரியான திசை, அதில் என்னென்ன இருக்க வேண்டும் எது என்பதை குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  பூஜை அறையில் மறந்தும் கூட இந்த சிலைகளை வைக்காதீர்கள்... ஏன் தெரியுமா..?

பூஜை அறை வாஸ்து:

  • வாஸ்து படி, வீட்டில் இருக்கும் பூஜை அறை வடக்கு திசையில் இருக்க வேண்டும்.
  • பூஜை அறை படிக்கட்டுகளுக்கு கீழ் இருக்கக் கூடாது.
  • பூஜை செய்யும் போது வடகிழக்கு திசையில் அமர்ந்துதான் செய்ய வேண்டும்.
  • பூஜை அறையில் இருக்கும் சிலைகள் ரொம்பவே பெரியதாகவோ (அ) ரொம்பவே சிறியதாக இருக்கக் கூடாது.
  • பூஜை அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலையை வைக்க கூடாது.
  • பூஜை அறையில் அனுமன் சிலை இருந்தால் தினமும் பூஜை செய்ய மறக்காதீர்கள்.
  • பூஜை அறை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • சிலைகளுக்கு சாத்தும் பூக்களை தினமும் மாற்ற வேண்டும்.

இதையும் படிங்க:  பூஜை அறையில் 'இந்த' பொருட்களை வைக்காதீங்க.. வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும்.. பணம் தங்காது.. ஜாக்கிரதை!

பூஜை அறையில் வைக்க வேண்டியவை:

  • பூஜை அறையில் லட்டு வைத்திருக்கும் குழந்தை கிருஷ்ணர், ராம தர்பார் (அ) ராம பட்டாபிஷேகம் படம் வைக்கலாம்.
  • பூஜை அறையில் தந்திரம் எந்திரம் தொடர்பான பொருட்களை வைக்கக்கூடாது.
  • அதுபோல நடராஜர் சிலையையும் பூஜை அறையில் வைக்க கூடாது.
  • பூஜை அறையில் ராதையுடன் கிருஷ்ணர் இணைந்திருக்கும் சிலையை வைக்கலாம்.
  • பூஜை அறையில் வடக்கு திசையில் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். இந்த தண்ணீரை தினமும் மாற்று மறக்காதீர்கள்.
  • பூஜை அறையில் எப்போதும் ஒரு சிறிய விளக்கு எரிந்து கொண்டு இருக்க வேண்டும்.
  • பூஜை அறையில் எப்போதும் தூப தீப ஆராதனைக்கு உரிய பொருட்கள் வைத்திருக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!