Latest Videos

Palani Murugan Temple: பக்தர்களின் கவனத்திற்கு! பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

By vinoth kumarFirst Published Jun 21, 2024, 9:55 AM IST
Highlights

உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துதள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துதள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பத்கர்கள் வருகின்றனர்.  பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் தெரியுமா?

ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப்காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். 

இதையும் படிங்க: Pournami: பவுர்ணமி கிரிவலத்துக்கு திருவண்ணாமலைக்கு போறீங்களா? பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!

அதன்படி இன்று ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  ஆகையால் ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!