பில்லி, சூனியம் ஏவல் போன்ற தீவினைகள் நம்மை நெருங்காமல் விட்டு விலக கோமாதா வழிபாடு குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கோமாதா வழிபாடு ரொம்பவும் சிறப்பு வாய்ந்தது. பசுவை தெய்வமாக வணங்குவதால் கடவுள்கள் யாவரையும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும். நமக்கு வேண்டாதவர்கள் வைத்த பில்லி சூனியம் ஏவல் போன்ற தீய வினைகளில் இருந்து விடுபட அமாவாசை தினத்தன்று கோமாதாவிற்கு அகத்திக்கீரை வாங்கி கொடுக்கலாம்.
அம்மாவாசை அன்று கோமாதாவிற்கு அகத்திக்கீரை கொடுக்கும் போது நம்மை விட்டு பில்லி சூனியங்கள் விலக வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டே கொடுக்க வேண்டும். கோமாதா வழிபாட்டால் பில்லி சூனியங்கள் மட்டும்தான் விலகுமா என்றால்... இல்லை என்பது தான் பதில். கோமாதா வழிபாட்டினால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
திருமண தடை
திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப்பெண்கள் அரச மரத்தின் கீழே நிற்க வைத்து கோமாதாவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை ஆகியவை கொடுத்து காமேஸ்வரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அப்படி செய்வதால் எந்த வயதாக இருந்தாலும் திருமண தடை உடனே விலகி மணமேடை செல்லும் வரம் கிடைக்கும். கோமாதாவிற்கு மாலை அணிவித்து அந்த மாலையை எடுத்து தங்களுடைய கழுத்தில் அணிந்து அரச மரத்தை வலம் பெற வேண்டும்.
இதையும் படிங்க: நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி? இந்த 6 வழிகள் இருக்கு..! 1 தர்பூசணிக்குள் ஓராயிரம் நன்மைகள்!!
பில்லி சூனியங்கள்
அகத்திக்கீரை வாங்கி ஒரு நாள் முழுவதும் நம் வீட்டில் வைத்திருந்து சனிக்கிழமை அன்று பசுவிற்கு கொடுத்து வணங்க வேண்டும். பசுவின் கோமியத்தை மஞ்சள் நீருடன் கலந்து அதனை வீட்டில் தெளித்தால் பில்லி சூனியங்கள் விலகி ஓடும். பசுவை வளர்க்காத ஒரு வீட்டில் காலையில் தற்செயலாக ஒரு பசு வந்து நின்றால் அந்த வீட்டிற்கு நல்ல செய்தி வருகிறது என்று அர்த்தம். அந்த பசுவிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம் கொடுக்க வேண்டும் என்பார்கள்.
பசுவை காண்பது மகாலட்சுமியே காண்பதாக பொருளாகிறது. நமக்கிருக்கும் தீட்டு துர் மந்திர கட்டு ஆகியவைகள் அகல புதன்கிழமை அன்று பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கி கொடுக்க வேண்டும். எப்போதும் நல்ல சுத்தமான அகத்திக் கீரையை பசுவிற்கு கொடுக்க வேண்டும். பழுத்த அகத்திக்கீரைகளை கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்து பசுவிற்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நமக்கே பாவமாக வந்து முடிந்துவிடும்.
இதையும் படிங்க: காலையில் சுக்கு மல்லி கஷாயம்... எவ்வளவு சளி இருந்தாலும் முறிக்கும்.. 1 டம்ளர் குடித்தால் போதும்..!