நம் வீட்டில் புறா கூடு கட்டுவது நல்ல விஷயங்கள் நடப்பதற்கான சுப அறிகுறி என சாஸ்திரம் சொல்கிறது.
இந்து மதத்தில் இயற்கைக்கும், விலங்குகளுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. பறவைகள், விலங்குகள் இரண்டுமே கிரகத்துடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளன. இதுவே அவற்றை சுப, அசுப சகுனங்களில் கணக்கிடப்படுவதற்குக் காரணம். சில ஜீவராசிகள் நம் வீட்டுக்கு வருவது சுபமானதாக கருதப்படுவது போல சில உயிரினங்கள் அசுபமாகவும் கருதப்படுகின்றன. புறாவை எடுத்து கொண்டால், அது மங்களகரமான பறவைகளில் ஒன்றாகும். வீட்டில் புறா மாதிரியான பறவை கூடு கட்டினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
நம் வீட்டிற்குள் புறா நுழைந்தவுடன் துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாக மாறும் என்பது ஐதீகம். ஆகவே வீட்டில் உள்ள புறா கூட்டை ஒருபோதும் அழிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. புறாக்கள் உங்கள் வீட்டில் கூடு கட்ட ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய அறிகுறிகள் சிலவற்றை இங்கு காணலாம்.
பல நேரங்களில் புறாக்கள் வீட்டின் பால்கனி, மொட்டை மாடி அல்லது ஏசியில் கூடு கட்டும். சகுன சாஸ்திரத்தில் புறா கூடு கட்டுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஒரு புறா வீட்டிற்குள் நுழைந்தால், அது குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது என்று நம்பப்படுகிறது. புறாவின் வருகையால், வீட்டின் துரதிர்ஷ்டம் அதிர்ஷ்டமாக மாறும்.
விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான அறிகுறிகள் சகுன சாஸ்திரத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் புறாக்கள் கூடு கட்ட ஆரம்பித்தால், விரைவில் பணம் வந்து சேரும் என்று சகுன் சாஸ்திரத்தில் நம்பப்படுகிறது.
புறாவின் கூட்டை அகற்ற வேண்டாம்!
புறா மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. அதனால்தான் புறாக் கூட்டை அகற்றவேக்கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. புறா மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, எனவே புறாக்களுக்கு தினமும் உணவளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கும்.
இதையும் படிங்க: உங்க வீட்டுல பெட்டி பெட்டியாக பணம் குவியணுமா? இந்த 4 விஷயங்களை தவறாமல் பண்ணி பாருங்க!! நிச்சயம் பலன் உண்டு