வெள்ளிக்கிழமை அன்று 3 ஏலக்காய்களை 27 நாட்கள் இப்படி வைத்தாலே போதும்.. நினைத்தது கைக்கூடும்..!

By vinoth kumar  |  First Published Jul 27, 2023, 3:43 PM IST

மனிதர்களாக பிறந்த ஏழை, கோட்டீஸ்வர்கள் அனைவருக்கும் பிரச்சனை இல்லாமல் இருந்ததே கிடையாது. அப்படி இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட  கோவிலுக்கு சென்று கடவுளை மனதார வேண்டி கொள்கிறோம். 


மனிதர்களாக பிறந்த ஏழை, கோட்டீஸ்வர்கள் அனைவருக்கும் பிரச்சனை இல்லாமல் இருந்ததே கிடையாது. அப்படி இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட  கோவிலுக்கு சென்று கடவுளை மனதார வேண்டி கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் வீட்டில் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய ஏலக்காய்க்கு நிறைய மகத்துவம் கொண்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், ஏலக்காய்களை வைத்து பரிகாரம் செய்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் குளித்துவிட்டு பூஜை அறையில்  மகாலட்சுமியின் பாதங்களில் 3 ஏலக்காய்களை வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள். 

Tap to resize

Latest Videos

அதன் பிறகு ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொண்டு அதில் இந்த 3 ஏலக்காயை வைத்து முடிச்சு போட்டு கொண்டு மகாலட்சுமியை மனதார வேண்டி 27 நாட்கள் பூஜை அறையில்  அப்படியே வைத்து விடுங்கள். பிறகு அந்த 3 ஏலக்காயை எடுத்து உங்கள் வீட்டில் உள்ள செடிகளில் போட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் 27 நாட்களில் உங்கள் வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படுவதை நீங்களே காணலாம்.

click me!