நாக சாதுவாக ஒருவர் மாறுவதற்கான செயல்முறை எளிதானது அல்ல. நாக சாதுவாக மாறுவதற்கு சவாலான பயிற்சிகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடுமையான பழக்கவழக்கங்கள் அவசியம்.
இந்தியா துறவிகள் மற்றும் ஞானிகளின் நாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த மகான்களும் மகாத்மாக்களும் கடவுளுக்கு மிக நெருக்கமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். முனிவர்கள் மற்றும் துறவிகளின் வாழ்க்கை பற்றி பேசும் போது, நிச்சயம் நாக சாதுக்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது. நாக சாதுக்கள் வாழ்நாள் முழுவதும் நிர்வாணமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஆடை உலக வாழ்க்கை மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனாலேயே அவர் உடலை மறைக்க ஆடைகளுக்கு பதிலாக சாம்பலை பயன்படுத்துகிறார். அவர்கள் இமயமலை போன்ற இடங்களில் வாழ்வதால் கடுங்குளிரை சமாளிக்க அதே நேரம் கடினமான யோக செயல்களை செய்ய வேண்டும்.
எனினும் நாக சாதுவாக ஒருவர் மாறுவதற்கான செயல்முறை எளிதானது அல்ல. நாக சாதுவாக மாறுவதற்கு சவாலான பயிற்சிகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடுமையான பழக்கவழக்கங்கள் அவசியம். நாக சாதுக்கள் வழக்கமான மனித வாழ்விடங்களில் இருந்து விலகி, தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதற்காக சமூக வாழ்க்கையைத் துறக்கிறார்கள். அவர்கள் பிரம்மச்சரியத்தை மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்கிறார்கள், எனவே இந்துக்கள் மத்தியில் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.
நாக சாதுக்களின் வரலாறு
வரலாற்று ரீதியாக, மொஹென்ஜோதாரோ காலத்தில் உருவங்கள் மற்றும் நாணயங்களில் நாகர்களின் தடயங்கள் உள்ளன. பசுபதிநாத் வடிவில் சிவபெருமானை வழிபடும் சாதுக்களின் படங்கள் குறிப்பிட்ட தொல்பொருள் இடங்களிலிருந்து அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டன. அலெக்சாண்டர் அவரும் அவரது படைகளும் இந்தியாவில் இருந்தபோது இந்த சாதுக்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களின் பக்தியாலும் தவத்தாலும் கவரப்பட்ட மகாவீரர் மற்றும் புத்தர் ஆகியோரும் அவர்களைப் பற்றி குறிப்பிட்டனர். சமண மதத்தைப் பின்பற்றும் திகம்பர் சாதுக்களும் நாக சாதுக்கள் பின்பற்றும் சடங்குகளின் தடயங்களைக் கொண்டுள்ளனர்.
நாக சாதுவாக மாற என்ன செய்ய வேண்டும்?
ஏற்கனவே சொன்னப்டி இந்த செயல்முறை சிக்கலானது, கடினமானது. ஒரே இரவில் நாக சாதுவாக மாற முடியாது. நாகாவாக மாறுவதற்கான உங்கள் இலக்கை அடைய பல்வேறு கடினமான நிலைகளை கடக்க வேண்டும். எனவே சிலரால் மட்டுமே சாதுவாக முடியும். பல சவாலான பயிற்சிகள் உள்ளன. ஒரு சாதாரண மனிதன் நாக சாதுவாக ஆக வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் போது, அந்த நபர் நாக சாதுவாக ஆவதற்கு தகுதியானவரா இல்லையா என்பதை அதன் மட்டத்தில் உள்ள அகடா கமிட்டி விசாரிக்கிறது. குழு திருப்தி அடைந்தால், அந்த நபர் அகடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்.
பிரம்மச்சரிய நிலை: அகடா, யாரையும் மிக விரைவாக நாகா ஆவதற்கு அனுமதிப்பதில்லை. அவர்கள் முதலில் ஆர்வமுள்ள நபரின் பின்னணி குறித்து முழுமையான விசாரணை நடத்துவார்கள். ஆர்வமுள்ள நபர் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பதைப் பற்றிய முழுமையான உத்தரவாதத்தை அளித்த பிறகு, அவர் அகடாவில் அனுமதிக்கப்படுவார். நாகா வாழ்க்கை முறையை வழிநடத்தும் நபரின் திறனை பல சோதனைகள் தீர்மானிக்கின்றன. இந்த சோதனைகள் சுமார் ஒரு வருடம் முதல் 12 ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த சவாலான கட்டத்தைத் தாண்டினால்தான், அந்த நபர் அடுத்த படிக்குச் செல்ல முடியும்.
மகாபுருஷனாக மாறுதல்: ஒரு மகாபுருஷர் மிகவும் அசாதாரணமான ஆளுமை. இந்த கட்டத்தில், ஆர்வமுள்ள நாக சாதுவிற்கு ஐந்து குருக்கள் (ஆசிரியர்கள்) இருப்பார்கள். இந்த குருக்கள் சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன் மற்றும் விநாயகர் ஆகியோர் ஆவர். ஒரு ருத்ராட்சம், குங்குமம் மற்றும் சாம்பல் மட்டுமே நாக சாதுவின் உடையாக இருக்கும்.
அவதூத் நிலை: சாதாரண மனிதர்கள் கொண்டிருக்கும் அனைத்து கவலைகள் மற்றும் உலகப் பற்றுகளுக்கு அப்பாற்பட்டது இந்த நிலைக்கு அவசியமாகிறது. நாக சாதுவாக மாற விரும்பும் நபர் தலையை மொட்டையடித்து, அகடா குருவின் வழிகாட்டுதலின் கீழ் தனது மரண சடங்குகளை செய்கிறார். இந்த மரணச் சடங்கு, அந்த நபர் இப்போது இறந்துவிட்டார் என்பதை வெளியுலகிற்கு உணர்த்துகிறது. நாக சாது இனி, வேத மரபுகளையும் சனாதன தர்மத்தையும் பின்பற்றி பாதுகாக்க வேண்டும்.
இறுதிக் கட்டம்: இது சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் கடினமான கட்டமாகும். நாகசாது 24 மணி நேரம் அகடாவின் கொடிக்கு கீழே நிற்க வேண்டும் என்பதோடு இந்த செயல்முறை தொடங்குகிறது. இரண்டு கைகளிலும் தண்ணீர் நிரம்பிய பானைகளை அவர் தோள்களில் ஒரு கனமான பொருள் வைத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர் அகடா உறுப்பினர்களால் கடுமையான கண்காணிப்பில் இருப்பார். ஆண்குறியை செயலற்றதாக மாற்ற மந்திரங்களின் உதவியுடன் மெதுவாக அடிக்கப்படும். இந்த உடற்பயிற்சி படிப்படியாக ஆண்குறியை பலவீனப்படுத்துகிறது. இவை அனைத்தும் சனாதன தர்மத்தையும் தேசத்தையும் பாதுகாப்பதற்காக நாக சாதுவை ஒரு யோதாவாக (போராளியாக) மாற்றுகிறது. இந்த நிலை முடிந்ததும், அந்த நபர் முழுமையான நாக சாதுவாக மாறுவார்.
நாக சாதுக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
நாக சாதுக்கள் தினமும் ஒரு முறை மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்குக் கிடைத்ததைத்தான் சாப்பிட முடியும். அவர்கள் ஒரு நாளைக்கு 7 வீடுகளில் மட்டுமே உணவுக்காக பிச்சை எடுப்பார்கள். இந்த வீடுகளில் எதைக் கிடைத்தாலும் சாப்பிட வேண்டும். அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் நாள் முழுவதும் பட்டினி கிடக்க வேண்டும். மாலையில் உணவு உண்டவுடன் நாக சாதுக்கள் உறங்குவார்கள். நாக பாபாக்கள் பிரம்ம முகூர்த்தத்தில் (அதிகாலை 4.00 மணியளவில்) எழுந்திருக்க வேண்டும்.. அவர்கள் குளித்து, யோகாசனம் செய்து, பிரார்த்தனைகளைச் சொல்லி, தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். நாக சாதுக்கள், மிகவும் மதிக்கப்படும் சாதுக் குழுவாக உள்ளது.
நாக சாதுக்களுக்கு சிறப்பு இடமோ, வீடோ கூட கிடையாது. குடிசைகள் அமைத்து வாழ்க்கையை கழிக்கின்றனர். அவர்கள் தூங்குவதற்கு கூட படுக்கையைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் தரையில் மட்டுமே தூங்குகிறார்கள். நாக சாதுக்கள் வெவ்வேறு அகாடாக்களில் தங்கியுள்ளனர். பெரும்பாலான நாக சாதுக்கள் ஜூனா அகடாவில் உள்ளனர்.
வீட்டில் பாத்ரூம், டாய்லெட் எந்த திசையில் இருக்க வேண்டும்? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?