இரவு, பகல் பார்க்காமல் ஓய்வு உறக்கமின்றி உழைத்தாலும், அந்த காசு தங்களது வீட்டில் தங்குவதில்லை என்ற மாபெரும் குறை இன்றளவும் பலர் இல்லங்களில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஆன்மீக ரீதியாக ஜோதிடர்கள் பல தகவல்களை தொடர்ச்சியாக பொது மக்களுக்கு கூறி வருகின்றனர். அந்த வகையில் நாம் நமது வீட்டில் ஐஸ்வர்யத்தையும், பணத்தையும் பெரிய அளவில் புலங்கச் செய்ய எந்த வகையான செயல்களில் ஈடுபடலாம் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு பணம் என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று, அதை சம்பாதிக்க நமக்கு பல வழிகள் தெரிந்திருந்தும், சில சமயங்களில் அது நம்மிடம் தங்குவதில்லை. ஆகவே அதை நம் வீட்டில் தங்க வைக்க, ஐஸ்வர்யத்தை அதிகரிக்க நமது பிறந்த தேதிகளோடும், நமது பெயருடனும் தொடர்புடைய எண்களைக் கொண்ட நோட்டுகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைப்பதன் மூலம் நம்மால் பணத்தை நமது இல்லத்திற்குள் ஈர்க்க முடியும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
சரி அது எப்படி என்று தற்பொழுது பார்க்கலாம், முதலில் உங்கள் பெயரில் இருக்கும் பெயர் என்னை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதை கண்டுபிடிப்பதற்கு கீழே உள்ள முறையை பயன்படுத்தலாம்,
A,L,J,Q,Y=1
B,K,R =2
C,G,L,S =3
D,M,T = 4
E,H,N,X =5
U,V,W = 6
O,Z = 7
F, P = 8
இந்த முறையை பயன்படுத்தி உங்கள் பெயரின் என்னை நீங்கள் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக உங்கள் பெயர் S. Babu என்றால், 3+2+1+2+6 = 5 இது தான் உங்கள் பெயர் எஎண். அதன் பிறகு உங்களுடைய விதி எண், அதாவது உங்களுடைய பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு உங்கள் விதி எண்ணை நீங்கள் கணித்து விடலாம் உதாரணமாக, நீங்கள் பிறந்தது 12.11.1990 என்றால் 1+2+1+1+1+9+9+0 = 6 ஆகும், இது தான் உங்கள் விதி எஎண்.
அதே போல உங்களுடைய உடல் எண், இதை கண்டுபிடிக்க உங்களுடைய பிறந்த தேதி போதுமானது. அதன் கூட்டுத் தொகையை உங்கள் உடல் எண் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாகி நீங்கள் பிறந்த தேதி 15 என்றால் உங்கள் உடல் எண் 6. தற்போது உங்களின் உடல் எண், விதி எண் மற்றும் பெயரின் எண் ஆகியவற்றை கொண்டு (6,6,5) அந்த மூன்று எண்களில் முடியும் நோட்டுக்களை நீங்கள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு பிடித்தமான இடத்திலேயே அல்லது ஒரு உண்டியலிலோ இந்த பணத்தை நீங்கள் சேமித்து வைத்து நம்பிக்கையோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
வெள்ளிக்கிழமை அன்று 3 ஏலக்காய்களை 27 நாட்கள் இப்படி வைத்தாலே போதும்.. நினைத்தது கைக்கூடும்..!