வாழ்வில் ஒருமுறையாவது இப்படி ஒரு தானத்தை செய்ய வேண்டும்... ஏன் தெரியுமா?

வாழ்வில் ஒருமுறையாவது எந்த பொருள்களை தானம் செய்ய வேண்டும். அதனால் விளையும் நன்மைகள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம். 


சாஸ்திரங்கள் தானம் அளிப்பதை ஊக்குவிக்கிறது. சில பொருள்களை தானம் செய்வது நன்மைகளையும், சில தானம் தரித்திரியத்தையும் கொண்டு வரும். அப்படி பார்த்தால் பசு இந்து மதத்தில் தாயாக வணங்கப்படுகிறது. பசுவில் அனைத்து தெய்வங்களும் வசிப்பதாக நம்பப்படுகிறது. பசுவை தானம் செய்வதால் பெரும் புண்ணியம் கிடைக்கும். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது பசுவை தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் வெறுமனே பசுவை தானம் செய்ய முடியாது. அதற்கும் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பிராமணருக்கு வழங்கப்படும் பசு தானம் மிக உயர்ந்ததாக நம்பப்படுகிறது. பசுவை தானம் செய்வதற்கு முன் அதை அலங்கரிக்க வேண்டும். 

பசுவின் கொம்பில் பிரம்மாவும் விஷ்ணுவும் வசிப்பதாக நம்பப்படுகிறது. அதன் தலையில் மகாதேவனும், நெற்றியில் கௌரியும், நாசியில் கார்த்திகேயனும், கண்களில் சூரியன்-சந்திரன், காதில் அஷ்வினி குமாரன், பற்களில் வாசுதேவனும் குடிகொண்டுள்ளனர். நாக்கில் வருணன், தொண்டையில் இந்திரன், முடியில் சூரிய கதிர்கள், குளம்புகளில் கந்தர்வன், வயிற்றில் பூமி, நான்கு மடிகளில் நான்கு கடல்கள், கோமியத்தில் கங்கையும், சாணத்தில் யமுனையும் இருப்பதாக நம்பப்படுகிறது. தெய்வ பார்வை கொண்ட பசுவை தானம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.  

  • சனியிலிருந்து விடுதலை

Latest Videos

இந்து சாஸ்திரத்தின்படி, கருப்பு பசுவை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்து வந்தால் சனி தோஷம் குறையும்.  

  • கிரகங்களின் அமைதி 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒன்பது கிரகங்களின் அமைதிக்கு பசுவை தானம் செய்வது நல்லது. கிரகங்களின் அசுப நிலை பசுதானம் செய்வதால் சுபமாக மாறும். செவ்வாயில் தோஷம் இருந்தால், கண்டிப்பாக பசுவை தானம் செய்ய வேண்டும். இது வாழ்க்கையின் போராட்டங்களை குறைக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.  

  • மூதாதையருக்கு அமைதி

இந்து மதத்தின் படி, பசுவை தானம் செய்வது முன்னோர்களின் ஆன்மாவிற்கு நிம்மதி அளிக்கிறது. அவர்கள் முக்தி அடைவார்கள். இதனால் நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். முன்னோர்களின் அருள் நம் மீது இருப்பது மிகவும் அவசியம். அவர்களுக்கு கோபம் வந்தால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொதுவாக குடும்பத்தில் யாராவது இறந்தால் கோதானா (பசு தானம்) செய்யப்படுகிறது. அதற்கு தனி அங்கீகாரம் உண்டு. இதை செய்வது அவர்களின் ஆன்மா சொர்க்கத்தை அடைய உதவும் என்பது ஐதீகம்.  

இதையும் படிங்க: தங்க நகைகளை இந்த ராசிக்காரர்கள் அணிந்தால் கட்டாயம் கெட்டது நடக்கும்... தங்கத்தை தொலைத்தால்..?

  • நிதி பிரச்சனைக்கு தீர்வு

பசுவை தானம் செய்வதால் நிதி பிரச்சனை தீரும். கடனில் இருந்து விடுபடலாம். பசு தானம் செய்தால் நிதி நெருக்கடி ஒரு பிரச்சனையே இல்லாமல் ஆகும். லக்ஷ்மி அன்னையின் ஆசிர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்கும். 

பசு கிருஷ்ணருக்குப் பிரியமானது. அதை தானம் செய்தால் கிருஷ்ணர் திருப்தி அடைகிறார். அவருடைய அருள் நமக்கு கிடைக்கிறது. நமது எல்லா கஷ்டங்களும் நீங்கி ஆனந்த வாழ்வு கிடைக்கும். கோ சேவை, கோதானம் செய்வதால் நித்திய பலன்கள் கிடைக்கும். 

இந்த கருத்துக்கள் அனைத்தும் புராணங்கள் அடிப்படையிலும், ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையிலும் எழுதப்பட்டவை. அறிவியல்பூர்வமானதல்ல. 

இதையும் படிங்க: உலக பணக்காரரின் மனைவியாக இருந்தும் கூச்சமே இல்லாமல் நீதா அம்பானி செய்த காரியம்... வியக்கும் பிரபலங்கள்

click me!