வேலூர் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது வேலூர் கோட்டை. இந்த கோட்டை வளாகத்துக்குள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் 500 கிலோ அரிசி கொண்டு ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு 1 டன் காய்கறிகளை கொண்டு சாகம்பரி அலங்காரம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது வேலூர் கோட்டை. இந்த கோட்டை வளாகத்துக்குள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆலயத்தில் நேற்று அன்னாபிஷேகத்தை முன்னிட்டு ஜலகண்டீஸ்வரருக்கு 500 கிலோ அரிசி சமைத்து அன்னத்தால் அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடந்தது.
இதையும் படிங்க;- கிரகணம் முடிந்தபின் மீண்டும் திறக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்.. பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!
இதேபோல் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு 1 டன் காய்கறிகள் பழங்களை கொண்டு சாகம்பரி அலங்காரங்களை செய்து தீபாராதணைகளும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க;- ஐப்பசி பவுர்ணமி: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்.!!
இதேபோன்று காட்பாடி அடுத்த மேல்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த அருள்மிகு ஸ்ரீ தபஸ்கிருதம்மாள் சமேத அருள்மிகு சோமநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மேல்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.