உங்களுக்கு இருக்கும் கண் திருஷ்டியையும், இனி வரப்போகும் கண் திருஷ்டியையும் நீக்க உதவும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள் உள்ளன. அதனை எப்படி செய்ய வேண்டும் போன்ற தகவலை இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்...
இன்றைய வாழ்வில் நம்முடைய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் கண்டு பலர் பொறாமை கொண்டு நமக்கு தெரிந்தும், தெரியாமலும் கூட பலவிதமான தடங்கல்கள், இன்னல்கள் மற்றும் சிக்கல்கள் நமக்கு நேரிடும் படி சில தீங்கான விஷயங்களை செய்வார்கள். "கல்லடி பட்டாலும் கண் அடி படக் கூடாது" என்ற பழமொழியை நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படி கண் திருஷ்டி ஏற்பட்டால், நம் வாழ்வில் பல்வேறு விதங்களில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இதனை சரி செய்ய இந்த பரிகாரம் போதும். அது நம்முடைய மறைமுக எதிரியை நசுக்குவதோடு மட்டுமல்லாமல்,
அவர்கள் நமக்கு வைத்த சூழ்ச்சிகள் எதுவும் நம்மை நெருங்காது..
திருஷ்டியால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம்:
திருஷ்டியால் ஒருவர் திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இளைத்துப் போனால் அவருக்கு எப்படி திருஷ்டி சுற்றுவது என்று தெரியவில்லையா? அதற்கு முதலில் மூன்று தெருக்கள் கூடும் இடத்தில் சிறிதளவு மண், 9 காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி உப்பு, கொஞ்சம் கடுகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் அவற்றை போட்டவும். பின் பாதிக்கப்பட்ட நபரை கிழக்கு பார்த்து உட்காரவைத்து இடமிருந்து வலமாக மூன்று முறை மற்றும் வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்ற வேண்டும். சுற்றும் போது கண் பட்ட திருஷ்டிகள் கடுகு போல வெடிக்க வேண்டும் என்று சொல்லவும். அதன் பின், அவற்றை கடவுளை வேண்டியவாறு கரி அடுப்பு பற்ற வைத்து, எரியும் தணலில் போடவும். பிறகு உங்கள் கால்களை நீங்கள் தண்ணீரால் நன்கு கழிவு எப்பின் நெற்றியில் விபூதி பூசிக்கொள்ளுங்கள், மேலும் பாதிக்கப்பட்டவருக்கும் விபூதி பூசுங்கள் இதனால் அவர் விரைவில் குணமடைவார்.
பொறாமையால் ஏற்பட்ட திருஷ்டி நீங்க:
நாம் பாடுபட்டு உழைத்து நல்ல நிலமையில் இருக்குபோது சிலர் பொறாமை பட்டு திருஷ்டி வைப்பார்கள். இந்த திருஷ்டியை நீக்க பரிகாரம் என்னவென்றால் 'படிகாரம்' சுற்றி போடுவது தான். இதற்கு முதலில் நீங்கள் கடிகாரை ஒன்றை வாங்க வேண்டும் பிறகு திருஷ்டியால் பாதிக்கப்பட்ட நபர் கிழக்கு நோக்கி உட்கார வைத்து, வாங்கி வந்த படிகாரத்தை இடமிருந்து வலம் மூன்று முறை, வலமிருந்து இடது மூன்று முறை சுற்றவும். மேலும் அதனை அவரின் தலையில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கவும். பிறகு வீட்டின் பின்புறத்தில் தனல் பற்ற வைத்து அதில் அந்த படிகாரத்தை போடவும். பின் அடுத்த நாள் அதனை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து கை கால்களை நன்கு கழுவி விபூதி பூச வேண்டும். உங்களால் இதனை செய்ய முடியவில்லையென்றால் நீங்கள் படிகாரத்தை நீரிலும் போடலாம். ஆனால் அப்படி செய்யும் போது அதை நீங்கள் பிறர் கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வியாபாரம் அல்லது அலுவலகத்தில் ஏற்பட்ட திருஷ்டி நீங்க:
நீங்கள் உங்களது வியாபாரம் அல்லது அலுவலகதில் திடீரென சருக்கள் ஏற்பட்டால் அதற்கான பரிகாரம்... வளர்பிறை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று நீங்கள் கடற்கரைக்கு சென்று ஒரு பெரிய பாட்டிலில் கடல் நீரை எடுத்துக் கொள்ளவும். பின் அந்த நீரை நீங்கள் வடிகட்டி உங்கள் அலுவலகம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் தெளிக்கவும். இதனை நீங்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் மாதம் ஒருமுறை செய்யுங்கள். விரைவில் திருஷ்டி விலகி உங்கள் தொழில் நல்ல சிறப்பாக வளர்வதை நீங்கள் பார்ப்பீர்கள்.
திருஷ்டி வராமல் இருப்பதற்கான பரிகாரம்:
இதற்கு முதலில், ஒரு கருப்பு கம்பளி கயிற்றில் ஊமத்தங்காய் அல்லது தும்மட்டிக்காய் ஏழு மிளகாய், ஒரு சிறிய படிகாரம் ஆகியவற்றை சேர்த்து கட்டி வாசலில் தொங்க விடவும். நீங்கள் கட்டிய இந்த படிகாரம் கரைந்த பிறகு மீண்டும் புதிய பரிகாரத்தை வைத்து கட்டுங்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் உங்கள் கடையில் இவற்றை கட்டுகிறீர்கள் என்றால் கடையை திறந்த உடனே இரண்டு ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்க மறக்காதீர்கள். அது போல் கடையை மூடும் போது கடை வாசலில் கற்பூரம் ஏற்ற வேண்டும் என்பதே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இப்படி மட்டும் செய்து பாருங்கள், பிறகு உங்கள் வியாபாரம் செழிக்கும்.