இன்று சந்திர கிரகணம்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 8 மணி நேரம் மூடல்.. தரிசனங்களும் ரத்து..!

By vinoth kumar  |  First Published Oct 28, 2023, 9:15 AM IST

பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். 


சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 8 மணி நேரம் அடைக்கப்பட்டு பின்னர் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும். எனவே இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் ஐப்பசி பவுர்ணமியான இன்று வருகிறது. கிரகத்தின் போது எந்த விதமான சுப காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோயில் கதவுகளும் மூடப்படுவதால் தரிசன நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  கிரகணம் முடிந்த பின் கோவில் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்படும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சனிக்கிழமையன்று தவறுதலாக இந்தப்பொருட்களை வாங்காதீர்கள்; இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திபீர்.. ஜாக்கிரதை!

இந்நிலையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று இரவு 7.05 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில்;- சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி அதிகாலை 1.05 முதல் 2.22 வரை நிகழ உள்ளது. இதனையொட்டி, முந்தைய நாளான 28-ம் தேதியான இன்று இரவு 7.05 முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை சுமார் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  சந்திர கிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம்: எந்த நேரம்.. எப்படி வழிபடுவது.. சிறப்புகள் என்ன?

அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆகையால், 29-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை ஏகாந்தமாக நடைபெறும். சந்திர கிரகணத்தால் 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் அன்றைய மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

click me!