சந்திர கிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம்.. எந்த நேரம்.. எப்படி வழிபட வேண்டும்? சிறப்புகள் என்ன?

By Raghupati R  |  First Published Oct 27, 2023, 6:34 PM IST

ஒவ்வொரு பொருள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஒவ்வொரு விதமான பலனை தரும். அது போல அன்னத்தால் அபிஷேகம் செய்தால் பிறவா நிலை கிடைக்கும். சந்திரகிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் காணலாம்.


ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் அனைத்து 27 நட்சத்திரங்கள் சந்திரனின் மனைவியர் ஆவர். அதில் ரோகிணி நட்சத்திரத்துடன் மட்டும் பெரியளவில் நாட்டமில்லாமல் இருந்தார். இதனை தன் தந்தையிடம் ரோகிணி கூறினார். இதனாலவரது தந்தை தட்சனால் உன் உடல் தேயட்டும் என சாபமிட்டார். அப்போது முதல் சந்திரனின் ஒவ்வொரு கலை குறையத்தொடங்கி பொழிவிழந்தது. 

பிறகு அவர் தன் தவறை உணர்ந்து திங்களூரில் கைலாசநாதரை தன் சாபத்தை தீர்க்க வணங்கினார். சந்திரனின் 16 கலைகளில் மூன்று கலைகள் மட்டும் மீதமிருந்த நிலையில் சிவபெருமான் சந்திரனின் வேண்டுதலை ஏற்று அவருக்கு அருள் புரிந்தார். அந்த 3ம் பிறையை தன் தலையில் சூடினார். உன் சாபம் முழுமையாக நீங்காது. 

Tap to resize

Latest Videos

உன் பொழிவு முழுமையாக தேய்ந்து மறைந்து, பின்னர் படிப்படியாக வளர்ந்து பிரகாசித்து பின்னர் தேய்வதுமாக இருக்கும் என இருக்கும். என்னை சரணடைந்த இந்த ஐப்பசி மாத பெளர்ணமி மிக பிரகாசமாக இருக்கும் என அருளினார் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ஐப்பசி மாத பெளர்ணமி மிக விசேஷமாக சிவாலயங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. சந்திரன் இந்த ஐப்பசி பெளர்ணமி தினத்தில் பிரகாசிப்பார் என ஆன்மிகம் உணர்த்தியது. 

மேலும் அறிவியலும் பூமிக்கு அருகே சந்திரன் வருவதால் மிக பிரகாசமாக தனது முழு ஒளியை பூமிக்கு வீசுவதாக வானவியல் அறிவியல் தெரிவிக்கிறது.சிவ பெருமான் அன்ன அபிஷேக பிரியர். இவருக்கு ஐப்பசி பெளர்ணமி அற்புத தினத்தில் அன்ன அபிஷேகமும், பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

இந்த தினத்தில் தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகம் என்பதே ஆகும். சிவபெருமானுக்கு உகந்த இந்த அன்னத்தை ஒரு பருக்கை கூட வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பஞ்சபூதம் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்கள் சேர்ந்ததால் ஆகிறது. பஞ்சபூதங்களால் ஆன இந்த அன்னம் மனிதனுக்கு இன்றியமையாத உணவாக விளங்குகிறது. சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். இன்றைய தினம் நாம் அபிஷேகம் செய்யம் ஒவ்வொரு பருக்கை அன்னத்திலும் சிவ பெருமான் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம் ஆகும். 

அன்னாபிஷேக தரிசனம் கண்டால், பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் நமக்கு . இதனால் கடன் தீரும், வறுமை நீங்கும், பாவங்கள் தீரும், செல்வ வளம் சேரும், தரித்திரம் என்பது ஏற்படாது.  இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 28 ம் தேதி இரவு 11.31 மணிக்கு துவங்கி, அக்டோபர் 29 ம் தேதி அதிகாலை 03.36 வரை உள்ளது. ஏது பகுதி நேர சந்திர கிரகணமாகவே நிகழ உள்ளது. 

இந்தியாவில் இந்த சந்திர கிரகணத்தை காண முடியும் என சொல்லப்படுகிறது. பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்கள் அடைக்கப்பட்டு விடும், சுப காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த சந்திர கிரகணமானது இரவு நேரத்திலேயே நிகழ்வதால், இந்த கிரகணத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஐப்பசி மாத பவுர்ணமியான 28ம் தேதி அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது.

அதையொட்டி, மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம் ஆகும்.  அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், பவுர்ணமி கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் காரணமாக, அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தரிசன நேரம் மற்றும் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 28 மற்றும் 29ம் தேதிகளில் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் பயணம் செய்யும் போது மதுபானத்தை எடுத்து செல்லலாமா.? ரயில்வே வெளியிட்ட புது விதிகள்..

click me!