கறிவேப்பிலை முடிக்கு மட்டுமல்ல.. உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாம்.. கண்டிப்பா சாப்பிடுங்க..!

தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும்  நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

amazing health benefits of eating curry leaves on an empty stomach in the morning in tamil mks

கறிவேப்பிலை பெரும்பாலும் எல்லாருடைய வீடுகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இலைகள் உணவை வாசனையாகவும், சுவையாகவும் ஆக்குகின்றன. ஆனால், உங்களுக்கு தெரியுமா கறிவேப்பிலை சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

இரும்பு, கொழுப்பு, புரதம், கால்சியம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் இதில் உள்ளதால் உடல் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க இது பெரிது உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது முடி பிரச்சனை நீங்கி உச்சந்தலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இதற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் பல சிறந்த பலன்களை பெறலாம். எனவே, கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும்  நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  இரத்த சோகையை தடுக்கும் "கறிவேப்பிலை பூரி" செய்து கொடுத்தால் குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:
கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் டி ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது:

சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை ரொம்பவே நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைக்கலாம். சர்க்கரையை சமநிலையை வைத்திருந்தால், நமது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இதையும் படிங்க: முடிஉதிர்வை நிறுத்தி, இளநரையை மறைத்து கருமையா காடு மாதிரி முடி வளரனுமா ? இந்த 1 ஜூஸ் குடிங்க போதும்!

எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துகிறது:

கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் எடை அதிகரிப்பை எளிதில் கட்டுப்படுத்தலாம். இந்த இலைகளை தினமும் உட்கொள்வதால் கொழுப்பு வேகமாக எரிந்து எடை குறையும். மேலும் இது வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலை நச்சுத்தன்மையாக்குகிறது.

வயிற்று வலிக்கு அருமருந்து:
உங்களுக்கு வயிற்று வலி வந்தால் கறிவேப்பிலையை பயன்படுத்துங்கள். சிறிதளவு கருவேப்பிலையை இரண்டு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் பாதியாக வந்தவுடன் அதை வடிகட்டி அந்த நீரை குடித்தால் வயிற்று வலி, வாயு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பசி குறைவாக இருந்தாலும் இந்த நீரை குடிக்கலாம். அதுமட்டுமின்றி, வயிற்றுப் பிரச்சனைகள் போக்குவதிலும் இந்த நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புண்கள் மற்றும் பருக்களுக்கு நல்லது:

கறிவேப்பிலை தோல் பிரச்சினைகளுக்கு சிறந்தது. புண்கள் அல்லது பருக்கள் எங்காவது இருந்தால் கருவேப்பிலை அரைத்து அந்த பேஸ்ட்டை புண் அல்லது பருக்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும்:
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தால், கறிவேப்பிலையை பயன்படுத்துங்கள். கறிவேப்பிலை சாப்பிடுவதனால் உச்சந்தையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் நீக்குவதற்கும், பொடுகு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கவும் இது உதவுகிறது. அதுபோல கறிவேப்பிலையை கூந்தலில் பயன்படுத்த, அதை அரைத்து ஹேர் மாஸ்காக பயன்படுத்துங்கள். இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

vuukle one pixel image
click me!
vuukle one pixel image