உலக வாய் சுகாதார தினம்: மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு!

By Rsiva kumar  |  First Published Mar 26, 2023, 12:41 PM IST

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கடற்கரை சாலையில் நடனமாடி விழிப்புணர்வு செய்தனர்.
 


உலக வாய் சுகாதார தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. புதுச்சேரியிலும் வாய் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் நடைபெற்றது. இன்று மாலை புதுச்சேரி மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி பொது மக்களை கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடற்கரை சாலைக்கு வந்த பொதுமக்கள் அவர்களின் நடனத்தை ரசித்தவாறு விழிப்புணர்வை கைதட்டி வரவேற்றனர்.

Also Read This: காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: கல்லூரி மாணவர் தலைமறைவு!

Latest Videos

Read This: கணவரை கொலை செய்ய நண்பர் மூலம் முயற்சி செய்த சுந்தரி சீரியலின் துணை நடிகை கைது!

மேலும் படிக்க: புதுச்சேரியில் திருநங்கைக்கு போலீசார் பாலியல் தொல்லை; டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம்

click me!