அதிமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல், நகை பறிப்பு: சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி

By Velmurugan s  |  First Published Mar 21, 2023, 1:01 PM IST

புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி வீட்டில் இருந்த 82 சவரன் நகை மற்றும் ரூ.38 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரி அதிமுக நிர்வாகியாக இருப்பவர் கருணாநிதி. இவர் ரெயின்போ நகர் ஆறாவது குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார். தரைத்தளம், மேல் தளம் என இரண்டு தளங்களைக் கொண்டுள்ள இவரது வீட்டிற்கு இரவு 8.15 மணிக்கு மூன்று பேர் வந்துள்ளனர். முகவரி கேட்பது போல் அவரிடம்  பேச்சுக் கொடுத்துள்ளனர். 

அடுத்த சில நொடிகளில் அவரை கீழே தள்ளி கழுத்தில் கத்தியை வைத்து வீட்டு மாடி அறைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம், "உன்னை கொலை செய்வதற்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள்.. நீ கூடுதலாக பணம் கொடுத்தால் உன்னை விட்டு விடுவோம்" என்று கூறியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

அதற்கு அவர் நான் பணம் கொடுக்கிறேன்.. நீங்கள் போங்கள் என அவர் கூறியுள்ளார். அதனால் அவரது  பீரோ சாவியை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் கையில் சிகரட்டை வைத்து சூடு வைத்துள்ளனர். அதன் பின்பும் அவர் சாவி கொடுக்க மறுக்கவே அவர் கழுத்தில் கத்தியை வைத்து அவரை கொடூரமாக தாக்கி தரதரவென இழுத்துச் சென்று சாவியை வாங்கும் பரபரப்பு சிசிடிவி கட்சி வெளியாகி உள்ளது.

வாயில் வெடி மருந்து வெடித்தது தான் யானையின் இறப்புக்கு காரணம்; மருத்துவர்கள் பரபரப்பு அறிக்கை

அதன் பிறகு சாவியை பிடுங்கி சென்று பீரோவில் இருந்த 38 லட்சம் ரொக்க பணத்தை எடுத்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த 82 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் வெளியே செல்ல முயன்றனர். வெளியில் யாராவது வருகிறார்களா என்று பார்ப்பதற்காக நோட்டமிட்டு வெளியே நின்று இருந்த ஒருவர் யாரோ வீட்டுக்கு வருவதாக கூறவே வீட்டில் இருந்த சிசிடிவி இயந்திரங்களை அவர்கள் உடைத்து விட்டு வெளியே தப்பி சென்றனர்.

கோவையில் தாலிச் செயினை பறித்துச் சென்ற ராணுவ வீரரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

இதுகுறித்து தகவல் அறிந்த பெரிய கடை காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரியில் நகரின் மையப் பகுதியான ரெயின்போ நகரில் இரவு 8 மணிக்கு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!