புதுச்சேரியில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீசாரை கைது செய்யக் கோரி 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காவல்துறை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியில் வசிப்பவர் திருநங்கை வசந்தி (37). இவர் நேற்று அரியாங்குப்பம் பகுதியில் உள்ள பாலம் அருகே இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 3 போலீசார் தகாத முறையில் நடந்துக்கொண்டு திருநங்கை வசந்தியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட திருநங்கை வசந்தி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த 3-காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று காவலர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டிய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடந்த உழவர் வயல் தின விழா..!நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா.சைதன்யா திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பவம் நடைபெற்ற அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்திய அவர் போலீசார் தவறு செய்து இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருநங்கைகளின் இந்த திடீர் போராட்டத்தால் டிஜிபி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலதிபருக்கு காதல் வலை வீசி கார், பணம் கொள்ளை; கில்லாடி ஆசிரியை மீது கோவையில் வழக்கு