புதுச்சேரியில் நடைபெற்ற என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் என்எல்சி நிர்வாகம் பங்கேற்காததால் பேச்சுவார்த்தை தோல்வி.
என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் 13 ஆயிரம் தொழிலாளர்களுக்கான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் கடந்த மாதம் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் சார்பில் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் அவர்களுக்கான பேச்சுவார்த்தை இன்று புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
சேலம் கோட்டை மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்; லட்சக்ககணக்கான பக்தர்கற் பங்கேற்பு
அதன்படி இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை உதவி தொழிலாளர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர், ஆனால் என்எல்சி நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இது குறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் சேகர் கூறும் போது, இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்.எல்.சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.