வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி முதியவரை ஏமாற்றி ரூ.4 லட்சம் கொள்ளை

By Velmurugan s  |  First Published Oct 27, 2023, 12:17 PM IST

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று முதியவரிடம் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்த இணைய வழி மோசடிக்காரர்கள்.


புதுச்சேரி அரவிந்தர் வீதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 61). RBL வங்கியில் கணக்கு வைத்துள்ளார். வைத்தியநாதனின் செல்போனுக்கு அண்மையில் செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த போனை பேசிய போது எதிர் முனையில் பேசிய நபர் நான் RBL வங்கியின் புதுச்சேரி மேலாளர் பேசுகிறேன். உங்களுடைய வங்கிக் கணக்கு இன்றுடன் காலாவதியாகிறது. 

நீங்கள் காலாவதி ஆவதை தவிர்க்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வரும் அதை நீங்கள் என்னிடம் சொன்னால் உங்களுடைய வங்கி கணக்கை தொடர்ந்து உபயோகப்படுத்துவதற்கு நான் உதவி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலாளர் தான் தன்னுடன் பேசுகிறார் என்று நம்பி தனக்கு வந்த OTP எண்ணை சொல்லிவிட்டு மேலும் அவர்கள் கேட்ட ஆதார் எண், பான்கார்டு, வங்கி விவரங்களை தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன் அடிப்படையில் மோசடிக்காரர்கள் அவர் வங்கியில் இருந்த 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மொத்தத்தையும் எடுத்து விட்டனர். பணத்தை இழந்த முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் இணைய வழி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகையில் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் பாஜகவின் சதி - வீரமணி பரபரப்பு குற்றச்சாட்டு

இது சம்பந்தமாக இணைய வழி காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் எந்த ஒரு தனியார் மற்றும் அரசாங்க வங்கியில் இருந்து தொடர்பு கொண்டு OTP எண்ணை கேட்க மாட்டார்கள். ஆகவே OTP எண்ணை யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி எச்சரிக்கை செய்துள்ளனர்.

click me!